மதுராந்தகம் இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றால் தனது த.வெ.க பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக சவால் விடுத்துள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, த.வெ.க வெற்றி பெற்றால் தனது கட்சிப் பொறுப்புகளை விட்டு விலக உதயநிதி ஸ்டாலின் தயாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். “உதயநிதி ஸ்டாலின் தனது அப்பாவை வேணாலும் கூட்டிட்டு வந்து பிரசாரம் செய்துகொள்ளட்டும், முடிந்தால் 1 ஓட்டு ஜெயித்து காட்டுங்கள்” என்று உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஓபன் சேலஞ்ச் செய்தார். மதுராந்தகம் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றுவிட்டால், தான் த.வெ.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் ஆனால், த.வெ.க வெற்றி பெற்றுவிட்டால் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க பதவியில இருந்து ராஜினாமா பண்ண தயாரா?” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஓபன் சேலஞ்ச் செய்தார். மேலும், “உதயநிதி ஸ்டாலின் தனது அப்பாவை வேணாலும் கூட்டிட்டு வந்து பிரசாரம் செய்துகொள்ளட்டும், முடிந்தால் 1 ஓட்டு ஜெயித்து காட்டுங்கள்” என்று உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஓபன் சேலஞ்ச் செய்தார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல், சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க ஆட்சி அமைதத்தது. முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில், காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல் இடம்பெற்றுள்ளது. சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் வெளியே இருந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மதுராந்தகத்தில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற சத்யபாமா ஆகிய இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் தலைமையிலான த.வெ.க-வில் இணைந்தனர். அதே போல, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். அதே போல, விறாலிமலை தொகுதியில் வெற்றிபெற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கரூர் வெற்றிபெற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். பெரம்பூர், திருச்சி கிழக்கு 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த த.வெ.க தலைவர் விஜய், ஒருவர் 2 பதவிகளை வகிக்கக்கூடாது என்ற மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் பெருந்துறை, அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, விறாலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் மதுராந்தகம் தொகுதியில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க-வில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைந்த மரகதம் குமரவேல் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதே போல, தாராபுரம் தொகுதியில் சத்யபாமா போட்டியிடுகிறார். இந்நிலையில், மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா ஞாயிற்றுக்கிழமை (செப்.27) பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: “கபடியில் விளையாட தெரியாமல் கபடி விளையாட போய், கபடி கபடினு சொல்லாம கெட்ட வார்த்தை பேசினால் ஜெயிக்க முடியுமா? முடியாது. இன்னைக்கு இந்த மண்ணுல இருந்து சொல்றேன். இளவரசர் உதயநிதி அவர்களே, தம்பி நீங்க எங்க தலைவர் (விஜய்) லெவலுக்கு எல்லாம் பேச வேணாம். முதல்ல எங்க லெவலுக்கு பதில் சொல்லு. நான் இங்கே இருந்து சேலஞ்ச் பண்றேன். மதுராந்தகம் தொகுதியில நீங்க (தி.மு.க) ஜெயிச்சிட்டீங்கனா நான் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா பண்றேன். பிரசாரத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. உங்க அப்பாவ வேணாலும் கூட்டிட்டு வந்து பிரச்சாரம் பண்ணிக்கோங்க, உங்க தாத்தாவைக்கூட மதுராந்தகத்துக்கு கூட்டிடு வா பிரசாரம் பண்றதுக்கு. ஆனால், இளவரசர் உதயநிதி நீ தோத்துட்டினா, உன்னுடைய கட்சி (தி.மு.க) பதவி எல்லாத்தையும் ராஜினாமா பண்ண தயாரா? நான் சவால் விடுகிறேன். எங்க அண்ணனை (விஜய்) மதுராந்தகத்தில் ஜெயித்து காட்டுங்க. என்னை அண்ணன் பொறுப்பாளராக போட்டிருக்கிறார். அக்கா (மரகதம் குமரவேல்) இங்கே இருக்கிறார். நம்ம ராஜ்மோகன் இருக்கிறார், எல்லாரும் எளிய வீட்டு பிள்ளைகள். நீங்கதான் 70 வருட கட்சியாச்சே, பெரிய ஆலமரமாச்சே, உங்களுக்குதான் அரசியல் தெரியுமே, உங்களுக்குதான் தேர்தல் அரசியல் தெரியுமே, உங்ககிட்டதான் பணபலம் இருக்கே. மதுராந்தகத்தில் ஒரே ஒரு ஓட்டு நீங்க எக்ஸ்ட்ரா வாங்கி காட்டு. முதலில் நீங்க எங்ககிட்ட வாங்க. உங்கள மாதிரி ஓட்டுக்கு ஒரு ரூபாய் பணம் கொடுக்க மாட்டோம். எக்க அத்தை, எங்க அம்மா, எங்க தங்கச்சிக்கு நாங்க காசு கொடுத்துவிட்டு ஓட்டு வாங்கனுமா? இனிமேல் அந்த கலாச்சாரம் கிடையாது. இந்த ஓபன் சேலஞ்சுக்கு உதயநிதி தயாரா கேட்டு சொல்லுங்க. மு.க.ஸ்டாலின் அவர்களே உங்க புள்ளைய களத்தில் இறக்கிவிடுங்க. தேர்தலில் இறக்கிவிடுங்க. தேர்தல் யுத்தத்தில் இறக்கி வீடுங்க. எங்க அக்கா மரகதத்தைவிட ஒரு ஓட்டு முடிஞ்சா ஜெயிச்சி காட்டுங்க, நான் என்னுடைய பொதுச் செயலாளர் பதவியை ராஜினாம பண்ணிடறேன். நீங்கள், தி.மு.க-வில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துவிட்டு வெளியே வருவதற்கு நீங்க தயாரா?” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு ஓபன் சேலஞ்ச் விடுத்தார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
'மதுராந்தகத்தில் மட்டும் இது நடந்தால்... கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய நான் ரெடி; உதயநிதி தயாரா?' ஆதவ் அர்ஜுனா சவால்
📅
📍 Tiruppur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk