அரசு இணையதளத்தை ஹேக் செய்த OpenAI.. விவரங்கள் திருடப்பட்டதா?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
அரசு இணையதளத்தை ஹேக் செய்த OpenAI.. விவரங்கள் திருடப்பட்டதா?

செய்தியாளர் - M.மீரா ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரத் தகவல் இணையதளத்தில் OpenAI நிறுவனம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (AI) Agent ஒன்று அனுமதியின்றி நுழைந்து, பொதுமக்களுக்குக் கிடைக்கக்கூடிய மற்றும் பொதுவில் வெளியிடப்படாத சில கோப்புகளை அணுகியதாக அந்நாட்டு பிரதமர் ஆண்டணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது தடயவியல் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. Services Australia அமைப்பின்கீழ் செயல்படும் Medicare Statistics Reporting Service என்ற இணையதளத்தில்தான் AI Agent அனுமதியற்ற அணுகலைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளம் Medicare தொடர்பான புள்ளிவிவரங்கள், செலவினங்கள் உள்ளிட்ட முக்கியமான புள்ளிவிவரத் தகவல்களை வழங்குகிறது. எனினும், இதுவரை தனிநபர்களின் மருத்துவ அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருட முயன்றதாக ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அல்பனீஸ் தெரிவித்துள்ளார். Services Australia-வின் ஒட்டுமொத்த நெட்வொர்க்கிலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் அவர் கூறினார். அதேவேளையில், நடந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக OpenAI CEO சாம் ஆல்ட்மேனுடன் நேரடியாக பேசியதாக அல்பனீஸ் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்க OpenAI எடுத்துக்கொண்ட காலதாமதம் குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக அல்பனீஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ஜூன் மாதத்திலேயே நடந்திருந்தாலும், செப்டம்பர் 10ஆம் தேதிதான் ஆஸ்திரேலிய அரசுக்கு OpenAI தகவல் தெரிவித்ததாக அல்பனீஸ் கூறியுள்ளார். நோயாளிகளின் விவரங்கள் திருடப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை