தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்த அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், சேதமடைந்த 160 கி.மீ. நீளத்திலான 780 பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சியில் 418.56 கி.மீ. நீளமுடைய 488 எண்ணிக்கையிலான பேருந்து தட சாலைகளும், 5,65.89 கி.மீ. நீளமுடைய 35,978 எண்ணிக்கையிலான உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைத்தல், சாலைகள் மேம்படுத்துதல், நடைபாதைகள் அமைத்தல் மற்றும் சாலை சந்திப்புகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மாநகராட்சியின் பேருந்து தட சாலைகள் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் 2026-27ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் 110 ஆவது விதியின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 360 கிமீ நீளமுடைய பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக மண்டலம் 1 முதல் 15 வரையில் ள்ள சேதமடைந்த 45.13 கி.மீ. நீளமுள்ள 66 பேருந்து தட சாலைகள் மற்றும் 114.87 கி.மீ. நீளமுள்ள 714 உட்புறச் சாலைகள் என மொத்தம் 160 கி.மீ நீளத்திலான 780 பேருந்து மற்றும் உட்புறச் சாலைகளை ரூ.150 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்காக தமிழ்நாடு அரசின் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (TUFIDCO) மூலமாக விரிவான திட்ட அறிக்கைகளின் மதிப்பீடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இப்பணிகளுக்கு உடனடியாக ஒப்பங்கள் கோரப்பட்டு எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன் சாலைகள் மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜெம்’ வீரமணி வழக்கு – விசாரணையை விரைவுப்படுத்த வைகோ வலியுறுத்தல்! 6 லட்சம் மூட்டை நெல் தேக்கம்: குறைகளை சரி செய்து உடனுக்குடன் கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும் – அன்புமணி! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : தவெகவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு! ஆசிய விளையாட்டுப் போட்டி : பதக்கம் வென்றவர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
சென்னையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் – மாநகராட்சி ஆணையாளர்!
📅
📍 Tiruppur, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk