"தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அரசுத் தரப்பு சாட்சியாக வேண்டும்": செய்தியாளர் சந்திப்பில் ராகுல் கூறியது என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
"தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அரசுத் தரப்பு சாட்சியாக வேண்டும்": செய்தியாளர் சந்திப்பில் ராகுல் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images ஆங்கில நாளிதழான 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' புதன்கிழமை வெளியிட்ட புலனாய்வு செய்தியைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆதாரங்களுடன் 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுப்பி வருவதாகக் கூறிய ராகுல் காந்தி, தற்போது தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே முறைகேடுகள் தொடர்பாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, "ராகுல் காந்திக்கு அரசியல் அறிவு இல்லை" என விமர்சித்தார். "காங்கிரஸுக்கு எதிரான 'ஆட்சி எதிர்ப்பு அலை' எப்போதும் வலுவாகவே இருந்துள்ளது, ஆனால் எப்போது வெளிப்படையான தேர்தல்கள் நடக்கத் தொடங்கினவோ, அன்றிலிருந்து அவர்களால் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தாம் நடத்திய செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் பிற நிகழ்வுகளைப் பட்டியலிட்டுப் பேசிய ராகுல் காந்தி, எந்தெந்த சந்தர்ப்பங்களில் தான் 'வாக்குத் திருட்டு' விவகாரத்தை எழுப்பினேன் என்பதையும் விவரித்தார். இந்திரா காந்தி தனது அரசியல் புகழின் உச்சத்தில் இருந்தபோதும்கூட தேர்தலில் தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, சமீபத்திய பல தேர்தல்களில் 'ஆட்சிக்கு எதிரான மனநிலை' என்பதே காணாமல் போய்விட்டது போல் இருப்பதாகக் கேள்வி எழுப்பினார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார். மேலும், ஜனநாயக அமைப்பு சீரழிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்ட அவர், ஞானேஷ் குமார் அரசுத் தரப்பு சாட்சியாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆங்கில நாளிதழான 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்ட புலனாய்வு செய்தியைத் தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. கடந்த 10 மாதங்களில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக, அந்த நாளிதழின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. End of அதிகம் படிக்கப்பட்டது அச்செய்தியின்படி, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களிடம் சில தகவல்கள் மறைக்கப்பட்டதாகக் கூறியது முதல், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும், 'அதிகாரப்பூர்வமற்ற' மற்றும் 'சட்டவிரோதமான' நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இச்செய்தி வெளியாகியுள்ளது. பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ஹரியாணா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சிகள் மாறுவது வழக்கமான ஒன்றாக இருந்த நிலையில், சமீபத்திய தேர்தல்களில் மட்டும் 'ஆட்சி எதிர்ப்பு அலை' என்பது திடீரெனக் காணாமல் போய்விட்டதாகக் கேள்வி எழுப்பினார். "நான் ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது வாழ்க்கையின் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை ஓர் அரசியல் குடும்பத்திலேயே கழித்திருக்கிறேன். ஜனநாயகச் சூழலில் இயங்கும் எந்தவொரு அரசியல் தலைவரும் இதுபோன்ற ஒரு கருத்தைத் தெரிவிக்க முடியாது. ஏனெனில், இந்தியாவில் 'ஆட்சி எதிர்ப்பு அலை' என்பது ஒரு அடிப்படை அரசியல் சக்தியாக உள்ளது. அது எந்தவொரு அரசுக்கு எதிராகவும் மிக வேகமாக உருவாகத் தொடங்கும்; அது யாரையும் விட்டுவைக்காது" என்று ராகுல் காந்தி கூறினார். "இந்திரா காந்தி வங்கதேசப் போரில் வெற்றி பெற்று, தனது அரசியல் புகழின் உச்சத்தில் இருந்தார். ஆனால், ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே அவர் கடுமையான ஆட்சி எதிர்ப்பு அலையையும் பெரும் அரசியல் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. "அடுத்தடுத்து பல தலைவர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்களுக்கும் இது நடந்திருக்கிறது; மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நடந்திருக்கிறது. ஆனால், ஏன் நரேந்திர மோதிக்கு மட்டும் இது ஒருபோதும் ஏற்படுவதில்லை? அமித் ஷாவுக்கும், பாஜகவுக்கும் ஏன் ஆட்சி எதிர்ப்பு அலை உருவாகவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சக்திகளில் ஒன்றான 'ஆட்சி எதிர்ப்பு அலை' எங்கே மாயமாக மறைந்துபோனது? இதற்கான பதிலை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். இறுதியாக, அதற்கான பதிலும் எங்களுக்குக் கிடைத்துவிட்டது" என்றார். "வாக்குதான் நமது நாட்டின் அடித்தளம். அந்த வாக்கைத் தேர்தல் ஆணையம்தான் பாதுகாக்கிறது. அதற்கான அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது. வாக்குகள் அழிக்கப்பட்டால், நமது அரசியலமைப்பும் அழிந்துவிடும். "அரசியலமைப்பு பலவீனப்படுத்தப்பட்டால், சட்டங்களுக்கும் அதன் அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களுக்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும். இது மக்களின் வாக்களிக்கும் உரிமையின் மீதான தாக்குதல். ஒவ்வொரு குடிமகனின் கருத்துரிமையின் மீதான தாக்குதலும் கூட. வாக்குகளில் முறைகேடு இருப்பதாக நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அந்த வாக்குகளைப் பாதுகாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு" என்று ராகுல் காந்தி கூறினார். பட மூலாதாரம், Getty Images செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, ராகுல் காந்திக்கு அரசியல் புரிதல் இல்லை என்று விமர்சித்தார். "1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை. 1977-ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கு வங்கத்திலும், 1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிகாரிலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை. 1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு காந்தி குடும்பத்தின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை. 1999-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒடிசாவிலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இது குறித்து ராகுல் காந்திக்கு எந்தப் புரிதலும் இல்லை" என்று அவர் கூறினார். "ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் அரசியலுக்கு வந்த பிறகுதான் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு எதிரான அலையை எதிர்கொள்ளத் தொடங்கியது. காந்தி குடும்பம் கடந்த 100 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரத்தில் இருந்து வருகிறது. இன்று அவர்களுக்கு எதிரான ஆட்சி எதிர்ப்பு அலை எந்த அளவுக்கு வலுவாக உள்ளது என்றால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றி அவர்களால் தங்களது சொந்தத் தொகுதிகளில்கூட வெற்றி பெற முடியாது" என்றும் திரிவேதி கூறினார். "கடந்த 25 ஆண்டுகளாக ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன்தான் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது. இல்லையெனில், சோனியா காந்திக்கோ அல்லது ராகுல் காந்திக்கோ தங்களது பாரம்பரியத் தொகுதிகளில் சொந்த பலத்தில் வெற்றி பெறும் திறன் இல்லை. அதேபோல், ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் வயநாடு தொகுதியில் முஸ்லிம் லீக் ஆதரவுடன்தான் வெற்றி பெற்றனர்" என அவர் கூறினார். 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்ட புலனாய்வு செய்தி குறித்து கேள்வி எழுப்பிய சுதான்ஷு திரிவேதி, அச்செய்தியில் தேர்தல் ஆணையர்களில் யாருடைய நேரடி கருத்தாவது இடம்பெற்றுள்ளதா என்று கேள்வியெழுப்பினார். "அந்தச் செய்தியில் தேர்தல் ஆணையர் ஒருவரின் நேரடி கருத்து இடம்பெற்றுள்ளதா? இல்லையென்றால், 'தேர்தல் ஆணையர் இப்படிக் கூறினார்' என்று எதன் அடிப்படையில் தெரிவிக்கிறார்கள்? பத்திரிகை சுதந்திரத்தை மதிப்பவன் என்ற முறையில் நான் இதைக் கேட்கிறேன். வழக்கமாக, சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்கப்படும். அப்படியானால், அவர்களின் விளக்கம் இதில் இடம்பெற்றுள்ளதா? இல்லை" என்று அவர் கூறினார். மேலும், "அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்படவில்லை என்பதற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா? மூன்று தேர்தல் ஆணையர்களும் பங்கேற்காத செய்தியாளர் சந்திப்பு ஏதேனும் நடைபெற்றுள்ளதா? அப்படியானால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்ன அடிப்படை? "எந்தவொரு தேர்தல் ஆணையரின் அதிகாரப்பூர்வ கருத்தோ அல்லது 'ஆஃப் தி ரெக்கார்டு' (பதிவு செய்ய வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில் கூறப்படுவது) விளக்கமோ இல்லாத ஒரு செய்தியை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் கட்சி எவ்வாறு இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது? அதன் அடிப்படை என்ன என்பதை நான் நேரடியாகக் கேட்க விரும்புகிறேன்" என்றும் சுதான்ஷு திரிவேதி கேள்வி எழுப்பினார். பட மூலாதாரம், Ishant Chauhan/Hindustan Times via Getty Images தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திய ராகுல் காந்தி, "இங்கே என்ன நடக்கிறது என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்திருப்பது இந்திய நாட்டுக்கு எதிரான ஒரு செயலாகும். இது தேர்தலில் நடந்த ஏதோ ஒரு சிறிய முறைகேடு அல்ல. இது இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல்; நமது நாட்டின் சட்டக் கட்டமைப்பின் மீதான தாக்குதல். வாக்குகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியவர் நீங்கள்தான்" என்று கூறினார். "இந்தியாவில் ஜனநாயகம் அழிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவது உறுதி. அது இன்றாக இருக்கலாம், நாளையாக இருக்கலாம் அல்லது அதற்குப் பிறகாக இருக்கலாம்; ஆனால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஞானேஷ் குமார் தனது தற்போதைய நிலைமையைத் தீவிரமாகப் பரிசீலித்து, அரசுத் தரப்புச் சாட்சியாக மாற வேண்டும்" என்றும் ராகுல் காந்தி கூறினார். பிரதமர் நரேந்திர மோதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரின் புகைப்படங்களைக் காட்டிய ராகுல் காந்தி, அவர்கள் ஜனநாயக அமைப்பைச் சீரழிப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், இந்தியத் தேர்தல்களில் 100 சதவிகிதம் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். "ஞானேஷ் குமாருக்கு எதிராக இரண்டு தேர்தல் ஆணையர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். நான் இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறேன். இப்போது இரண்டு தேர்தல் ஆணையர்களே கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஞானேஷ் குமாரை பிரதமர் நரேந்திர மோதியும் அமித் ஷாவும்தான் தேர்ந்தெடுத்தனர். நமது வாக்களிப்பு முறைக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஞானேஷ் குமாரே பொறுப்பு என்று இப்போது இரண்டு தேர்தல் ஆணையர்கள் கூறுகின்றனர்" என்று ராகுல் காந்தி தெரிவித்தார். "வாக்குத் திருட்டுக்குப் பிறகு சட்டத் திருட்டு நடக்கிறது; அதைத் தொடர்ந்து அமைப்புகள் திருடப்படுகின்றன. வாக்குகள் திருடப்பட்டு, அதன் மூலம் நாடாளுமன்றத்தில் அமரும் ஓர் உறுப்பினர் ஏதேனும் ஒரு சட்டத்தை உருவாக்கினால், அது சட்டவிரோதமானது" என்றும் அவர் கூறினார். தேர்தல் ஆணையத்தில் நடைபெறுவதாகத் தாம் கூறும் முறைகேடுகள் மற்றும் 'வாக்குத் திருட்டு' விவகாரத்தை எந்தெந்த காலகட்டங்களில் எழுப்பினேன் என்பதை விளக்கும் காலவரிசையையும் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். ஞானேஷ் குமாரை தலைமைத் தேர்தல் ஆணையராகத் தேர்வு செய்யும் போதே, தனது எதிர்ப்பைத் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் வழங்கியதாகவும், அதையும் மீறி ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். "அமைப்பின் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது. மேலும், அமைப்புக்குள்ளிருந்தே எங்களுக்குத் தொடர்ந்து தகவல்கள் கிடைத்து வருகின்றன" என்றும் ராகுல் காந்தி கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை