ஒரு நபர் தொடர்ந்து ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கும் மேலாகச் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது சாதாரணமான விஷயமாக இருக்க முடியாது மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தில்தான் சொகுசாக ஓய்வு எடுக்கிறார் - CPM பி.சண்முகம் பேட்டி சென்னை மயிலாப்பூர் இந்து பெர்மனன்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பலநூறு கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதன் முன்னாள் தலைவர் தேவநாதன் யாதவ், கடந்த ஆறு மாதங்களாகச் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் கடும் கேள்வி எழுப்பியுள்ளார் இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு நபர் தொடர்ந்து ஆறு மாதங்கள் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது சாதாரணமான விஷயமாக இருக்க முடியாது. வேறு எந்த ஒரு கைதிக்காவது இத்தகைய ஒரு வசதி வாய்ப்பு கிடைக்குமா என்கிற கேள்வியை நீதிமன்றத்திடமும் கேட்க விரும்புகிறேன். இப்படித் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் எந்தவிதமான ஆட்சேபனையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்பதற்காக அல்ல, நடந்திருக்கிற சம்பவங்களை தொகுத்துப் பார்த்தால், அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் உட்பட குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவங்கள் எல்லாம் உதாரணமாக இருக்கிறது என்பதை அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்புகிறேன். தேவதாசனுடன் தொடர்புடைய பினாமி நபர்கள் மற்றும் குற்றவாளிகள் அனைவரையும் விரைவில் விசாரணை வலைகளுக்குள் கொண்டுவர வேண்டும். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மற்றும் அரசு இச்சம்பவத்தில் உரிய கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் பணம் திரும்பக் கிடைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" " என்று சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கான சிறு சேமிப்பாளர்கள், முதியவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் தங்கள் பணத்தை மீட்டெடுக்க வழியின்றி பல ஆண்டுகளாகக் கண்ணீருடன் நீதிமன்ற வாசலிலும் காவல் துறையினரிடமும் காத்துக் கிடக்கின்றனர். ஆனால், கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் மட்டும் மருத்துவமனையை ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாற்றிவிட்டு சொகுசாக வாழ்வது எந்த வகையில் நியாயம் என்ற கோபமான குரல்கள் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் எழுந்துள்ளன. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
நிதி மோசடியில் கைதான தேவநாதன் 6 மாதமாக தனியார் மருத்துவமனையில் இருப்பது எப்படி? மார்க்சிஸ்ட் சண்முகம் கேள்வி
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk