செப்டம்பர் 28 முதல் 30 வரை நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்: இயங்கும் வங்கிகள், கிடைக்கும் சேவைகள், ஊதிய முன்பணம் – முழு விவரம்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Business ✍️
செப்டம்பர் 28 முதல் 30 வரை நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்: இயங்கும் வங்கிகள், கிடைக்கும் சேவைகள், ஊதிய முன்பணம் – முழு விவரம்!

ஐக்கிய வங்கி யூனியன்களின் கூட்டமைப்பு (UFBU) அழைப்பு விடுத்துள்ள 3 நாள் வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் பொதுத்துறை வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துமாறும், அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை செப்டம்பர் 25 அன்றே வழங்கவும் நிதியமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எழுதியவர்:Anish Mondal வங்கி சேவைகள் நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஐந்து நாள் வேலை வாரத்தை அமல்படுத்துவது மற்றும் செயல்பாட்டுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்தை திரும்பப் பெறுவது ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி யூனியன்களின் கூட்டமைப்பான ஐக்கிய வங்கி யூனியன்களின் கூட்டமைப்பு (UFBU) அடுத்த வாரம் மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வங்கி ஊழியர்கள் சுமார் 90 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் ஐக்கிய வங்கி யூனியன்களின் கூட்டமைப்பு, செப்டம்பர் 28 முதல் இந்த மூன்று நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கவுள்ளது. முன்னதாக இந்த வார தொடக்கத்தில், அரசு விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி, செயல்பாட்டுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்தது. மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு வங்கி சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வங்கி ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். முன்மொழியப்பட்ட மூன்று நாள் வங்கி வேலைநிறுத்தம், செப்டம்பர் 30 அன்று வரும் வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிக்கும் நாளுடன் ஒத்துப்போகிறது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கணக்கு சமரசம், நிதி ஒதுக்கீடு, கருவூலம் மற்றும் சந்தை செயல்பாடுகள் போன்ற முக்கிய பணிகளை வங்கிகள் மேற்கொள்வதால் இந்தத் தேதி மிகவும் முக்கியமானது. இத்தகைய இடையூறு, அதற்கு முந்தைய வார இறுதியுடன் சேரும்போது, நிதி நாள்காட்டியில் குறிப்பாக உணர்திறன் வாய்ந்த ஒரு புள்ளியில் வங்கி சேவைகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் மூடப்படும் நிலையை ஏற்படுத்தும். இது வாடிக்கையாளர்கள், வணிகங்கள், அரசுப் பரிவர்த்தனைகள் மற்றும் சர்வதேச வங்கிச் செயல்பாடுகளுக்கு கணிசமான அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்றும் நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வங்கித் தேவைகள் நீண்ட காலத்திற்குப் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, வரும் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமையன்று அனைத்து பொதுத்துறை வங்கிகளும் (PSBs) மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளும் (RRBs) வழக்கம் போல் இயங்கும் என்று செப்டம்பர் 23, 2026 அன்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 27, 2026 அன்று அனைத்து வங்கி கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம் சார்ந்த கிளைகள் மற்றும் பணப் பெட்டகங்கள் (Currency Chests) முழுமையாக இயங்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. மூன்று நாள் வேலைநிறுத்தம் இருந்தபோதிலும், அனைத்து வங்கிச் சேவைகளும் முடங்காது. இந்த வேலைநிறுத்தம் பொதுத்துறை வங்கிகளையும் பிராந்திய கிராமப்புற வங்கிகளையும் மட்டுமே பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாட்டில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூகோ பேங்க் மற்றும் பஞ்சாப் & சிந்த் பேங்க் ஆகிய 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இருப்பினும், தனியார் துறை வங்கிகள் தொடர்ந்து இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தனியார் வங்கி வாடிக்கையாளர்கள் முக்கிய பரிவர்த்தனைகளுக்காக வங்கி கிளைகளுக்குச் செல்வது உட்பட தங்களது வழக்கமான வங்கி சேவைகளைத் தொடர்ந்து பெறலாம். வேலைநிறுத்தக் காலத்தில் தங்களின் வங்கிப் பரிவர்த்தனைகளை முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பணத் தேவைகளுக்கு ஏடிஎம்கள் மற்றும் தானியங்கி வைப்பு மற்றும் திரும்பப் பெறும் இயந்திரங்களை (ADWMs) பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர் சேவை மையங்கள் (CSPs), இணையவழி வங்கி, யோனோ (YONO), மொபைல் பேங்கிங், யுபிஐ (UPI) மற்றும் பிற டிஜிட்டல் வங்கி வழிகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. pic.twitter.com/UA0wJrsOMI இதேபோல் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளும் வேலைநிறுத்தக் காலத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கித் தேவைகளுக்கு மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், ஏடிஎம்கள், சிடிஎம்கள் (CDMs), யுபிஐ, கியூஆர் குறியீடு அடிப்படையிலான பரிவர்த்தனைகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், பிஓஎஸ் (PoS) முனையங்கள், பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் (BBPS) மற்றும் பிசினஸ் கரஸ்பாண்டன்ட்கள் (BCs) உள்ளிட்ட டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளன. Customer Advisory pic.twitter.com/7PHjqPdq5Y இந்த மூன்று நாள் வங்கி வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 2026க்கான சம்பளத்தை செப்டம்பர் 25 அன்றே முன் கூட்டியே வழங்குமாறு அனைத்து அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிடிஐ செய்தியின்படி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான செப்டம்பர் 2026 ஓய்வூதியமும், தொழில்துறை ஊழியர்களுக்கான செப்டம்பர் மாத கூலியும் செப்டம்பர் 25 அன்றே முன் கூட்டியே வழங்கப்படலாம். pic.twitter.com/8WxisGCkwD Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை