'தீ சூழ்ந்த போது 12 குழந்தைகளை காப்பாற்றினேன்; ஆனால் என் குழந்தையை இழந்தேன்'

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
'தீ சூழ்ந்த போது 12 குழந்தைகளை காப்பாற்றினேன்; ஆனால் என் குழந்தையை இழந்தேன்'

(இந்தச் செய்தியில் மனவேதனை தரக்கூடிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.) "என் மகளைத் தேட நேரமில்லை. முதலில் கைக்கு எட்டிய 12 குழந்தைகளையும் வெளியே கொண்டு வந்தேன். ஆனால் ஐந்து நாட்களே ஆன என் பெண் குழந்தை மூச்சுத்திணறி இறந்துவிட்டாள்," என்று பீர் கான் கூறுகிறார். "அந்தக் குழந்தைகளும் யாரோ ஒருவரின் பிள்ளைகள்தானே? அவர்களை எப்படி அங்கேயே விட்டுவிட முடியும்?" என அவர் கேட்கிறார். செப்டம்பர் 21-ஆம் தேதி இரவு 11.40 மணியளவில், தெலங்கானாவின் அடிலாபாத் ரிம்ஸ் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு சிறப்பு பிரிவில் (எஸ்.என்.சி.யு ) ஏற்பட்ட தீ விபத்தில், பீர் கானின் மகள் உட்பட ஐந்து குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த தினமே மூன்று குழந்தைகள் இறந்தனர். பின்னர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் செப்டம்பர் 23 ஆம் தேதி மேலும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். பீர் கானுக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில்தான் பெண் குழந்தை பிறந்திருந்தது. "முதற்கட்ட விசாரணையின்படி, எஸ்.என்.சி.யு. பிரிவில் இருந்த ஏசி அமைப்பில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றி, நச்சுப் புகை பரவியது," என்று தெலங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் தாமோதர் ராஜநரசிம்ஹா தெரிவித்தார். "விபத்து நடந்த சமயம் அங்கு 27 குழந்தைகள் இருந்தனர். மீட்கப்பட்ட மற்ற குழந்தைகள் அடிலாபாத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்," என்றும் அவர் கூறினார். End of அதிகம் படிக்கப்பட்டது இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க தெலங்கானா அரசு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. "விசாரணைக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என அமைச்சர் தெரிவித்தார். விபத்து நடந்த எஸ்.என்.சி.யு. பிரிவுக்குள் பிபிசி சென்றபோது, சுவர்களும் தரையும் கருமேகமாக படிந்த புகைச் சுவடுகளால் மூடப்பட்டிருந்தன. அங்கங்கே காலணிகள் சிதறிக் கிடந்தன. தரை கருகியிருந்தது. மருத்துவ உபகரணங்கள் சீர்குலைந்த நிலையில் காணப்பட்டன. "ஏசி இயந்திரத்தில் தீப்பற்றியது. அதன் பிறகு மூன்று முறை வெடித்தது போன்ற சத்தங்கள் கேட்டன. உள்ளே சென்று பார்த்தபோது புகை முழுவதும் பரவியிருந்தது. எதுவும் தெரியவில்லை. மூச்சு விட முடியாமல் வெளியே வந்துவிட்டேன். சுமார் அரை மணி நேரம் கழித்துதான் யாரோ ஒருவர் என் மகளை வெளியே கொண்டு வந்தார்," என்று கும்ரா தினேஷ் பிபிசியிடம் கூறினார். 15 நாட்களுக்கு முன்புதான் அவரது மனைவி இதே மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருந்தார். தீ விபத்திலிருந்து மீட்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்தக் குழந்தை இறந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். அடிலாபாத் மாவட்ட பழங்குடியின மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் ரிம்ஸ் மருத்துவமனை 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பழங்குடியின மக்கள் மேம்பட்ட சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையையே பெரிதும் நம்புகின்றனர். தலசீமியா, ரத்தச்சோகை போன்ற நோய்கள் அப்பகுதி கர்ப்பிணிப் பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன. இதன் விளைவாக குறைந்த எடை, சுவாசப் பிரச்னை, ரத்தச்சோகை உள்ளிட்ட சிக்கல்கள் தாய்மார்களுக்கும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அதிகம் ஏற்படுகின்றன. "இந்தச் சிக்கல்களை கருத்தில் கொண்டு, புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு 'சங்கல்ப்' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒன்பது இடங்களில் எஸ்.என்.சி.யு. மையங்களை அமைத்தது. அவற்றில் ஒன்றுதான் அடிலாபாத் ரிம்ஸ்," என்று மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ஜெய்சிங் பிபிசியிடம் கூறினார். பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு விபத்தின் போது எஸ்.என்.சி.யு வார்டுக்குள் புகை மூட்டம் அதிகமாகி எதையும் பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டபோது, அங்கிருந்த சிலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துப் புகையை வெளியேற்றினர். மகாராஷ்டிர மாநிலம் கின்வட் பகுதியைச் சேர்ந்த பெந்தூர் விக்ரம், சிகிச்சை பெற்று வந்த தனது தம்பியின் குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தார். "குழந்தையைப் பார்த்துவிட்டு வெளியே வந்த சில நிமிடங்களிலேயே வெடிப்பு சத்தம் கேட்டது. உள்ளே சென்றபோது அடர்ந்த புகை சூழ்ந்திருந்தது. அங்கு இருந்த ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தீயணைப்பு சிலிண்டரைப் பயன்படுத்தி கண்ணாடியை உடைத்தேன். பின்னர் ஒரு குழந்தையை வெளியே எடுத்துவந்தேன். மேலும் சில குழந்தைகளையும் மீட்டோம்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "விஷயம் தெரியவந்தபோது அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அனைவரும் பதற்றத்துடன் ஓடிக்கொண்டிருந்தனர். எங்கள் பழங்குடியின மக்களில் பலருக்கு தெலுங்கு சரியாகத் தெரியாது. பலர் அங்கு சிகிச்சை பெற்று வந்ததால், அவர்களை வேறு வார்டுகளுக்குக் கொண்டு செல்ல நாங்கள் உதவினோம். பொதுவாக, கிருமி தொற்று ஏற்படும் என்பதால் செருப்பு அணிந்தவர்களைக் கூட இந்த வார்டின் அருகில் சேர்க்க மாட்டார்கள். ஆனால் இப்போது இவ்வளவு பெரிய அலட்சியம் நடந்துள்ளது," என பழங்குடியின அமைப்பு ஒன்றைச் சேர்ந்த பூசம் சச்சின் பிபிசியிடம் தெரிவித்தார். தீ விபத்தில் சிக்கிய தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற சில குடும்ப உறுப்பினர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றனர். அவர்களில் அடிலாபாத் மாவட்டம் அனுகுண்டா கிராமத்தைச் சேர்ந்த காவேட்டி நிர்மலாவும் ஒருவர். "இன்னும் ஒரு நாள் இருந்தால் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கும். தீயையும் புகையையும் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். மூச்சே விட முடியவில்லை. இருந்தாலும் என் பேத்தியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உடலில் எரிச்சல் ஏற்பட்டாலும் உள்ளே சென்றேன். அவளது காதருகே இருந்த மச்சமும், படுக்கையில் விரிக்கப்பட்டிருந்த துணியின் நிறமும் பார்த்து அவளை அடையாளம் கண்டு வெளியே கொண்டு வந்தேன்," என்றார் நிர்மலா. குழந்தைகளை வெளியே கொண்டு வருவதில் சில செவிலியர்கள் அலட்சியம் காட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். "என் பகைவர்களுக்குக் கூட இப்படிப்பட்ட துயரம் வரக்கூடாது," என்று அவர் தனது அனுபவத்தை பிபிசியிடம் விளக்கினார். அவரது உறவினர் தாண்ட்ரா லக்ஷ்மண், "குழந்தைகளுக்கு சிறந்த சிகிச்சை கிடைத்தால் போதும். வேறு எதுவும் எங்களுக்கு தேவையில்லை," என்றார். "இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. மருத்துவமனை ஊழியர்களில் சிலர் சம்பவ இடத்தில் உதவி செய்தனர்," என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், ஊழியர்கள் அலட்சியமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அடிலாபாத் ரிம்ஸ் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ஜெய்சிங் மறுத்தார். சரியான முறையில் ஊழியர்கள் செயல்பட்டுக் குழந்தைகளை வெளியே கொண்டு வந்ததாகக் கூறினார். தரமற்ற ஏசி யூனிட்டுகள் என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார். "சம்பவம் நடந்த சில நிமிடங்களுக்குள் நான் அங்கே வந்துவிட்டேன். எங்கள் தரப்பில் எந்த அலட்சியமும் நடைபெறவில்லை. பணியில் இருந்த மருத்துவர்கள், துறைத் தலைவர்கள், இளநிலை மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அனைவரும் இணைந்து பத்து நிமிடங்களுக்குள் குழந்தைகளை வெளியேற்றினர். பின்னர் ஆம்புலன்ஸ்கள் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றினோம்," என்று அவர் கூறினார். மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளிலும் பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கே தங்களின் முதல் முன்னுரிமை என்றும் அங்கு சிறு பிரச்னை என்றாலும் உடனடியாகச் சரிசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை