சி.சி.டிவி காட்சி மற்றும் உடைந்த வளையல் தடயங்களின் அடிப்படையில், இட்லி கடை உரிமையாளர் விஜயலட்சுமியைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். 2 பவுன் நகைக்காக குனியமுத்தூரில் மூதாட்டியை கொலை செய்த இட்லி கடை பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சி.சி.டிவி மற்றும் உடைந்த வளையல் தடயத்தை வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை குனியமுத்தூர் பகுதியில் 2 பவுன் தங்கச் செயினுக்காக மூதாட்டி ஒருவரை கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த இட்லி கடை பெண் உரிமையாளரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கோவை குனியமுத்தூர் வெத்தலைக்காரர் வீதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (54). தனியாக வசித்து வந்த இவர், கடந்த 15-ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த குனியமுத்தூர் காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். போலீஸாரின் முதற்கட்ட ஆய்வில், வீட்டில் இருந்த மூதாட்டியின் 2 பவுன் தங்கச் செயின் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதனால் நகைக்காக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியபோது, உயிரிழந்த மூதாட்டியின் சடலத்திற்கு அருகில் சில உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள் சிக்கின. தொடர்ந்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைத் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இட்லி கடை உரிமையாளரான விஜயலட்சுமி (42) என்பவர் மூதாட்டியின் வீட்டிற்குச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. கூர்ந்து கவனித்ததில், வீட்டிற்குள் செல்லும்போது அவர் கைகளில் வளையல் அணிந்திருந்ததும், வெளியே வரும்போது கையில் வளையல்கள் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. சி.சி.டிவி காட்சி மற்றும் உடைந்த வளையல் தடயங்களின் அடிப்படையில், இட்லி கடை உரிமையாளர் விஜயலட்சுமியைப் பிடித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து, அவரிடமிருந்த 2 பவுன் தங்கச் செயினைக் களவாட முயன்றபோது மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதனால் பயந்துபோன கொலையாளி, மூதாட்டியின் வாயைப் பலமாகப் பொத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்தப் போராட்டத்தின்போதே கொலையாளியின் கை வளையல்கள் உடைந்து விழுந்தது விசாரணையில் அம்பலமானது. சம்பவம் நடந்து சில நாட்களிலேயே துரிதமாகச் செயல்பட்டு, சிறு தடயத்தை வைத்து கொலையாளியைக் கைது செய்த தனிப்படை போலீஸாரைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
2 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை: உடைந்த வளையலை வைத்து கொலையாளியை கைது செய்த போலீஸ்
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk