தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாக விளங்கும் முதன்முறை வாக்காளர்களான 18 வயது Gen-Z இளைஞர்களிடமிருந்து வாக்குரிமையை அப்பட்டமாகப் பறிக்கும் சதியில் அமித் ஷாவுடன் சேர்ந்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஈடுபட்டு வந்திருப்பது இப்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 1958-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைமுறையில் இருந்துவந்த வருடாந்திர சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (SSR) 2024 ஜனவரிக்குப் பிறகு முடக்கி வைத்து, லட்சக்கணக்கான புதிய தலைமுறை இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் இணையவிடாமல் இவர் தடுத்து நிறுத்தி வந்திருப்பது ஆதாரங்களுடன் தற்போது அம்பலமாகியுள்ளது. நமது தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்தும், நாட்டின் ஜனநாயக அமைப்புகள் ஆளும் பாஜகவின் பிடிக்குள் சிக்கிச் சீரழிக்கப்பட்டு வருவது குறித்தும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எச்சரித்து வந்த உண்மை இப்போது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெளிவாகப் புரிந்துவிட்டது. இளைஞர்களின் மாற்றத்திற்கான குரலையும், மோடி அரசின் அநீதிகளை எதிர்க்கும் இளைஞர் சக்தியையும் தேர்தல் களத்திற்கு வரவிடாமல் திட்டமிட்டுத் தடுக்கும் அற்ப அரசியலில் தலைமை ஆணையர் ஈடுபட்டு வந்தது இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சிதைத்து, லட்சக்கணக்கான இளைஞர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் துரோகத்தில் ஈடுபட்டு வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இதற்கு முழுப் பொறுப்பேற்று உடனடியாகத் தனது பதவியை விட்டு வெளியேற வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று பரப்புரை! ஆசிய விளையாட்டுப் போட்டி: தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து! இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“தலைமைத் தேர்தல் ஆணையர் அல்ல! அமித் ஷாவின் Agent” – மாணிக்கம் தாகூர்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk