வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் 25-ம் தேதியே ஊதியம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்குச் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் நாளையே (செப்டம்பர் 25) வழங்கப்படும் என்று தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ சித்திக் உத்தரவிட்டுள்ளார். நாடு தழுவிய வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நிதிப் பரிவர்த்தனைகள் முற்றிலும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குச் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் நாளையே (செப்டம்பர் 25) முன் கூட்டியே வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய நிதி அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளன. நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் வரும் செப்டம்பர் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக மாத இறுதியில் வங்கிச் பரிவர்த்தனைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: வங்கி வேலைநிறுத்தத்தால் மாத இறுதியில் வழக்கமாக வழங்கப்படும் ஊதியம் தாமதமாவதைத் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்குச் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் நாளையே (செப்டம்பர் 25) வழங்கப்படும் என்று தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ சித்திக் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் முன் கூட்டியே நிதி: இதேபோல், மத்திய அரசு ஊழியர்களுக்கும் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் நாளையே வழங்கப்பட உள்ளது. மேலும், மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கான செப்டம்பர் மாத ஓய்வூதியத் தொகையும் நாளையே (செப்.25) அவர்களின் கணக்குகளில் செலுத்தப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: ஊதியம் வழங்கும் பணிகளும், வங்கிப் பரிவர்த்தனைகளும் தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) அன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த முன்ஹெச்சரிக்கை நடவடிக்கையால் அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
வங்கி வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்கள், பென்ஷனர்களுக்கு செப்.25-ம் தேதியே சம்பளம்: தமிழக அரசு உத்தரவு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk