190 குழந்தைகளின் பட்டினிச்சாவுக்கு காரணமான மத போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
190 குழந்தைகளின் பட்டினிச்சாவுக்கு காரணமான மத போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை!

கென்யாவில் 190 குழந்தைகளின் பட்டினிச்சாவுக்கு காரணமான மத போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை... கென்யாவில் மத போதகர் பால் மெக்கன்சிக்கு 200 ஆண்டுகள் சிறை... - AP கென்யாவில், 190 குழந்தைகளின் பட்டிச்சாவுக்குக் காரணமான மத போதகருக்கு 200 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கென்யாவில், குட்நியூஸ் இண்டர்நேஷனல் சர்ச் எனும் பெயரில் இயங்கிய மதக்குழுவொன்று இயேசு கிறிஸ்துவைக் காண வேண்டும் என்றால் குடும்பத்துடன் உணவு சாப்பிடாமல் தீவிரப் பட்டினி விரதம் கடைபிடிக்க வேண்டுமெனக் கூறி கிராம மக்கள் ஏமாற்றியுள்ளது. அந்தக் குழுவின் தலைவரான மத போதகர் பால் மெக்கன்சி தன்னை ஒரு தீர்க்கதரிசி எனக் கூறியதை நம்பி அவருடன் சென்று பட்டினி விரதம் கடைபிடித்த சுமார் 400 பேர் பலியானதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு கிலிஃபி நகரத்திலுள்ள பால் மெக்கன்சிக்கு சொந்தமான 800 ஏக்கர் பண்ணையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு புதைக்கப்பட்டிருந்த சுமார் 400 பேரது உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 190 குழந்தைகள் உள்பட சுமார் 191 பேரின் மரணத்துக்கு பால் மெக்கன்சி மற்றும் அவரது கூட்டளிகள் 28 பேர் காரணம் எனக் கூறி அவர்களைக் கொலைக் குற்றவாளிகள் என கென்யா நீதிமன்றம் கடந்த அக்.19 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் 191 பேரின் மரணத்துக்குக் காரணமான பால் மெக்கன்சிக்கு, மொம்பாசா நகரத்தின் உயர் நீதிமன்றம் நேற்று (நவ. 6) 200 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, பால் மெக்கன்சியால் மரணமடைந்த சுமார் 400 பேரில் தற்போது வரை சுமார் 60 பேரின் உடல்கள் மட்டுமே அவர்களின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது குறுப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை