31 என்பது புதிய 21... உலக டூர் ஃபைனல்ஸ் போட்டிக்குத் தேர்வாகிய பிவி சிந்துவின் பேட்டி!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
31 என்பது புதிய 21... உலக டூர் ஃபைனல்ஸ் போட்டிக்குத் தேர்வாகிய பிவி சிந்துவின் பேட்டி!

உலக பாட்மின்டன் சம்மேளனத்தின் (பிடபிள்யூஎஃப்) உலக டூர் ஃபைனல்ஸ் போட்டிக்குத் தேர்வான பிவி சிந்துவின் பேட்டி குறித்து... பிவி சிந்து - படம்: எக்ஸ் / டிடி ஸ்போர்ட்ஸ் உலக பாட்மின்டன் சம்மேளனத்தின் (பிடபிள்யூஎஃப்) உலக டூர் ஃபைனல்ஸ் போட்டிக்குத் தேர்வாகி பிவி சிந்து அசத்தியுள்ளார். முன்னதாக இவர் 2018ல் இதில் சாம்பியனாகியுள்ளார். இந்திய வீரர்களில் உலக டூர் ஃபைனல்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் மற்றும் ஒரே இந்தியராக பிவி சிந்துவின் சாதனை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. தெலங்கானவைச் சேர்ந்த பிவி சிந்து சமீபத்தில் பிரெஞ்சு ஓபனில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார். அவர் உலக தரவரிசையில் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளதால், உலக டூர் ஃபைனல்ஸுக்குத் தேர்வாகி அசத்தியுள்ளார். வரும் டிசம்பரில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டிக்கு தேர்வான 8 பேர்களில் ஒருவராக பிவி சிந்து இருக்கிறார். டாப் 8 வீராங்கனைகள் இதில் பங்கேற்பார்கள். இது பற்றி 31 வயதான பிவி சிந்து கூறியிருப்பதாவது: உலக தரவரிசையில் டாப் 6க்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றாக விளையாடினால், தற்செயலாகவே வெற்றியும் கிடைக்கும்; தரவரிசையிலும் முன்னேற்றம் கிடைக்கும். நன்றாக விளையாடி தொடர்களை வென்றால், தரவரிசைப் பட்டியல் குறித்து கவலைப்படத் தேவையில்லை. அது தானாகவே முன்னேறும். பாட்மின்டன் எப்போதுமே சவலான விளையாட்டு. களத்தில் அமைதியாக இருப்பது நல்லது. அடுத்த ஆண்டுமுதல் ஒரு போட்டிக்கு 15 கேம்கள் என்பதால் எல்லாம் புதியதாக இருக்கும். அதற்கேற்ப நாம் தகவமைத்துக்கொள்ள வேண்டும். எனக்கு முந்தைய தலைமுறை மற்றும் இளைய தலைமுறையுடனும் போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சி. நமது உடலைப் பார்த்துக்கொண்டால் எவ்வளவு நாள்களும் விளையாடலாம். பல விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது 30, 31, 32 வயதுகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதனால், என்னாலும் உயர்ந்த இடத்துக்கு வர முடியும் என நம்புகிறேன். அடுத்த தொடருக்காக நான் எனது உடலைப் பாதுகாக்க வேண்டும். சிறிய இடைவெளி அளிக்க வேண்டும். நான் இளம் வீராங்கனை அல்ல; ஆனால், 31 வயது என்பதும் புதிய 21 வயதுதான் என்பதை நாம் மறக்கக் கூடாது. அதனால், எனது உடலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறேன். உலக டூர் ஃபைனல்ஸில் கவனம் செலுத்துகிறேன். வெற்றி பெறுவது இனிப்பானது. நாம் செய்யும் தவறுகள் நமக்கு நன்றாகவே தெரிகிறது. முன்பெல்லாம் எப்படி இதெல்லாம் நடக்கிறதெனத் தெரியாது. ஆனால், இப்போது எல்லாமே புரிகிறது என்றார். 2018 Womenâs Singles Champion PV Sindhu is officially qualified for the BWF World Tour Finals 2026.All set to take on the worldâs best on the biggest stage! #BWFWorldTourFinals2026 pic.twitter.com/yfKaUbpvmD தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை