ஆந்திராவில் கரையை கடந்த 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் மழை நிலவரம் என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
ஆந்திராவில் கரையை கடந்த 'முரசு' புயல் - தமிழ்நாட்டில் மழை நிலவரம் என்ன?

பட மூலாதாரம், India Meteorological Department வங்கக்கடலில் உருவான தீவிரப் புயலான 'முரசு', இன்று அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரையிலான நேரத்தில் ஆந்திராவில் கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லூருக்கும் நரசாபுரத்துக்கும் இடையே, ஓங்கோல் அருகே முரசு புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 120 கி.மீ. வரை அதிகரித்தது. இந்தப் புயல் தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நண்பகலுக்குள் இது புயலாக வலுவிழக்கும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரை இருக்கும்; அவ்வப்போது மணிக்கு 100 கி.மீ. வரை அதிகரிக்கலாம். இன்று நள்ளிரவுக்குள் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வரை இருக்கும்; அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ. வரை அதிகரிக்கலாம். இதனால் தெற்கு ஆந்திரக் கடலோர மாவட்டங்களில் கனமழை, மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்வது, சாலைகளில் வெள்ளம் தேங்குவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. பட மூலாதாரம், India Meteorological Department முரசு புயல் ஆந்திரக் கரையை நோக்கி நகர்ந்தபோது தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது. சென்னையின் காசிமேடு உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களில் கடல் சீற்றம் மற்றும் வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. புயலின் நேரடி தாக்கம் தமிழகத்தில் குறைவாக இருந்தாலும், அதன் வெளிப்புற மழை மேகங்களால் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. முரசு புயலால் கடல் நீர்மட்டம் வழக்கத்தைவிட உயரக்கூடும் என்றும், இதனால் தாழ்வான கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகும் அபாயம் இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. End of அதிகம் படிக்கப்பட்டது வானியல் அலை மட்டத்தைவிட சுமார் 1 முதல் 1.5 மீட்டர் வரை கடல் நீர்மட்டம் உயரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் பாபட்லா, கிருஷ்ணா, பிரகாசம் மாவட்டங்களின் தாழ்வான கடலோரப் பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கலாம். இதனால் கடற்கரையை ஒட்டிய குடியிருப்புகள், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் தாழ்வான நிலப்பகுதிகளில் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. இந்த எச்சரிக்கை நவம்பர் 3ஆம் தேதி காலை வரை அமலில் இருக்கும் என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் நிலையில், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்கள், ராயலசீமா மற்றும் தெலங்கானாவின் பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சில இடங்களில் மிக அதிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தெற்கு மற்றும் மத்திய கடலோர ஆந்திரப் பகுதிகளில் நவம்பர் 3ஆம் தேதியும் மழை நீடிக்கலாம். புயல் நிலப்பரப்புக்குள் நகரும்போது அதன் தீவிரம் படிப்படியாகக் குறையக்கூடும் என்றாலும், அதனுடன் தொடர்புடைய மழை மேகங்கள் காரணமாக உள்மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெலங்கானாவிலும் நவம்பர் 3ஆம் தேதி சில இடங்களில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பட மூலாதாரம், R. Satish BABU / AFP via Getty Images புயல் கரையைக் கடக்கும் முன்பே ஆந்திரப் பிரதேச அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. கடலோரத்தின் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசித்த சுமார் 2,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும், தேவையெனில் சுமார் 30,000 பேரை வெளியேற்றத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் பிடிஐ செய்தி அடிப்படையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டிருந்தார். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தேவையான பணியாளர்கள், வாகனங்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை முன்கூட்டியே அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் எவ்வளவு நேரத்தில் சீரமைக்கப்படும் என்பது குறித்த தகவல்களை மக்களுக்குத் தெரிவிக்குமாறும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டுக்கொண்டிருந்தார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விமானம் மற்றும் ரயில் சேவைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. மோசமான வானிலை காரணமாக விஜயவாடா, விசாகப்பட்டினம், திருப்பதி, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. திங்களன்று குறைந்தது 30 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக செய்தி முகமைகள் தெரிவித்தன. முரசு புயலின் தாக்கம் ஆந்திரப் பிரதேசத்துடன் முடிந்துவிடாது என்பதால் ஒடிசா மாநிலத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றன. ஒடிசாவின் ஐந்து பாதிப்புக்குள்ளாகக்கூடிய மாவட்டங்களில் இருந்து திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 1.6 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படை, ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை