ஆத்தூர் அருகே ஆணைவாரி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடை அருவி - பிரதி படம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆணைவாரி அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்வதால், சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை விதித்துள்ளனர் வனத்துறையினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட முட்டல் கிராமத்தில் ஆணைவாரி அருவி அமைந்துள்ளது. அருவியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து சீராக வந்ததால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிகளவில் செந்நிறத்தில் நீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆத்தூர் அருகே ஆணைவாரி அருவியில் வெள்ளப்பெருக்கு! குளிக்கத் தடை