கடந்த ஆட்சியின் உயர்கல்வித் துறை மீது விசாரணை நடத்தப்படுவது குறித்து... திமுக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி | கோவி. செழியன் கடந்த ஆட்சியில் இருந்த உயர்கல்வித் துறையின் மீதும் விசாரணை நடத்தப்படும் என நிதித் துறை அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது குறித்து செய்தியாளர்களுடன் அமைச்சர் மரியவில்சன் பேசியதாவது, "முதல்வரின் மேசையில் இருக்கும் 3 கோப்புகளில் இருந்து ஒரு கோப்பு மட்டும் திறக்கப்பட்டதற்கே திமுகவினர் அலறுகின்றனர். செல்லும் திருமண நிகழ்வுகளிலெல்லாம் தவெக அரசு மீது அவதூறு கூறி வருகின்றனர். மீதமுள்ள கோப்புகளைத் திறந்தால் என்ன நடக்கும் எனத் தெரியவில்லை. பள்ளிக்கல்வித் துறையில் நடந்த ஊழல் மன்னிக்க முடியாதது. அடிப்படையான சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கல்வித் துறையில் ஊழல் செய்துவிட்டு, தற்போது சிறையில் உணவு வேண்டும், பெயில் வேண்டும் என்று (அன்பில் மகேஸ்) சொல்கிறார். இதேபோல், உயர்கல்வித் துறையும் கண்டிப்பாக விசாரிக்கப்படும்" என்று தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சியில் 1,000-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு பல்வேறு அங்கீகாரம், அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்குமேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக முன்னாள் அமைச்சர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது புகாா் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆட்சியில் இருந்த உயர்கல்வித் துறையிலும் விசாரணை நடத்தப்படவிருப்பதாக அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடியும், கோவி. செழியன் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்பில் மகேஸுக்கு அடுத்ததாக உயர்கல்வித் துறையில் விசாரணை! அமைச்சர் மரியவில்சன் விளக்கம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗