“கோவை பெரியார் அறிவுலகம் தப்பித்தது, ஏனெனில்...” மு.க.ஸ்டாலின் விவரிப்பு

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
“கோவை பெரியார் அறிவுலகம் தப்பித்தது, ஏனெனில்...” மு.க.ஸ்டாலின் விவரிப்பு

கோவை: “பெரியார் அறிவுலகத்தில் தொண்ணூற்று ஒன்பதே முக்கால் சதவீதம் பணிகள் முடிந்ததால் தப்பித்தது. இல்லையென்றால் ஆளும் அரசால் மூடுவிழா கண்டிருக்கும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்தை தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (நவ.4) பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “திராவிட மாடல் அரசின் கனவுத் திட்டமான, தந்தை பெரியார் பெயரில் அமைந்துள்ள இந்த அறிவுலகத்தை பார்க்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு இன்றைக்கு கிடைத்துள்ளது. ஏற்கெனவே நான் வந்து இதை பார்த்திருந்தாலும், திட்டம் முழுமையடைந்து திறந்துவைக்கப்பட்ட பிறகு, ஆசிரியர் வீரமணியுடன் வந்து பார்த்துள்ளேன். அதிகம் கூட்டம் இருந்த காரணத்தால், பொறுமையாக அனைத்தையும் பார்க்க முடியாத சூழல். நிச்சயம் இன்னொரு முறை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற ஆசை, எனது உள்ளத்தில் எழுந்துள்ளது. இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்வது, இன்றைக்கு தமிழ்நாடு போய்க்கொண்டிருக்கிற ஒரு சூழ்நிலையில் திராவிட இயக்கம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? தந்தை பெரியாரின் உணர்வுகள் மற்றும் லட்சியங்கள் என்ன என்பதையெல்லாம் அறிந்து கொள்ள இளைஞர்கள், மாணவர்கள் பெரியார் அறிவுலகத்தை பார்த்து அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அன்பான வேண்டுகோளை வைக்கிறேன். ஏற்கெனவே தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது. எனது தலைமையில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எழுப்பப்பட்டது. நெல்லையில் காயிதே மில்லத் பெயரிலும், திருச்சியில் காமராஜர் பெயரிலும் நூலகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்தை பொறுத்தவரை தொண்ணூற்று ஒன்பதே முக்கால் சதவீதம் வேலைகள் முடிந்துவிட்டதால் இன்றைக்கு திறக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் இந்த அரசு இதற்கும் மூடுவிழா நடத்தியிருப்பார்கள். நல்லவேளை தப்பித்துவிட்டது. அதுபோல் மற்ற நூலகங்களும் கொண்டு வரப்பட வேண்டும்” என்றார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறும்போது, “நாம் அனைவரின் வாழ்நாளிலும் மிக முக்கியமான நாள். அதை செய்தவர் இங்கு இருக்கிறார். அவருடன் நாம் அனைவரும் மகிழ்ந்து நிற்கிறோம். கோவை காந்திபுரத்தில் எழுப்பப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தின் சாதனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிச்சயமாக இருக்கும். இது வெறும் நூலகம் அல்ல. அறிவியலும் இருக்கிறது. இங்கு மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காது, பெரியார் கண்ட இனிவரும் உலகம் எப்படி இருக்க வேண்டும் என சொல்லும் போது, எப்படி இருக்கும் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செய்துள்ளார். எனது வாழ்நாளில் 84 ஆண்டுகள் பொது வாழ்வில் இப்படி ஒரு பொன்னான வாய்ப்பை நான் பெற்றது இல்லை. அனைவரின் சார்பில் கோடான கோடி நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். அறிவுலகம் பரவட்டும் அறியாமை நீங்கட்டும். சாதி, மதம் பேதம் இல்லாமல் எல்லோரும் வரும் இடம் இதுதான். இதை நிர்மானித்தவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. காலமெல்லாம் ஸ்டாலின் வாழ்வார், திராவிடம் வாழும், நூலகம் பெருகும்” என்றார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை