தேர்தல் தோல்விக்கு பிறகு உலகை தனது நடவடிக்கைகளால் திரும்பி பார்க்க வைக்க டிரம்ப் என்ன செய்யக்கூடும்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
தேர்தல் தோல்விக்கு பிறகு உலகை தனது நடவடிக்கைகளால் திரும்பி பார்க்க வைக்க டிரம்ப் என்ன செய்யக்கூடும்?

பட மூலாதாரம், Mandel Ngan / AFP via Getty Images டொனால்ட் டிரம்ப் எப்போதும் எதையும் மிகைப்படுத்திப் பேசுபவர். அமெரிக்காவின் பெரும்பான்மையான வாக்காளர்கள் அவருக்குப் பெரும் தோல்வியை அளித்திருப்பதில் ஒருவித அரசியல் ஊழ்வினை இருக்கிறது. ஆனால், தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்லும் டிரம்ப், அவ்வளவு எளிதாக அதிகாரத்தைக் கைவிட்டுவிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழப்பது, உள்நாட்டில் தனது விருப்பப்படி முடிவுகளை எடுக்கவும், அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்ளவும், குழப்பங்களை ஏற்படுத்தவும் அவருக்கு இருக்கும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும். ஆனால், வெளிநாட்டு விவகாரங்களில் நிலைமை வேறுபட்டிருக்கலாம். அமெரிக்க அதிபராகவும், அந்நாட்டின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் இருக்கும் டிரம்ப், அமெரிக்காவின் ராணுவ வலிமையைப் பயன்படுத்துவதற்கு இன்னமும் பரந்த அதிகாரங்களைக் கொண்டிருக்கிறார். டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளையும், அவர் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதையும் கணிப்பது எளிதல்ல. அதிபரான பிறகு, கொள்கை முடிவுகளில் திடீர் மாற்றங்களை செய்வதை ஓர் அரசியல் ஆயுதமாகவே அவர் பயன்படுத்தி வருகிறார். இருப்பினும், அவரிடம் மாறாத சில குணங்கள் இருக்கின்றன. தோல்வியாளர்கள் என்று அவர் கருதுபவர்களை இழிவாகப் பார்ப்பதும், தன்னை ஒருபோதும் தோல்வியாளராக மற்றவர்கள் கருதிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதும் அவற்றில் ஒன்று. இடைக்காலத் தேர்தலில் தனக்குக் கிடைத்த படுதோல்வியை மறைக்கும் வகையில், வெளிநாடுகளில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர் டிரம்ப் விரும்பலாம். தேர்தல் தோல்வியால் தனது செல்வாக்கு குறைந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், வலிமையான அதிபர் ஒருவர் எடுக்கும் தீர்க்கமான, வெற்றிகரமான நடவடிக்கைகள் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளக்கூடிய சில நகர்வுகளை அவர் மேற்கொள்ளலாம். End of அதிகம் படிக்கப்பட்டது தேர்தலில் தான் போட்டியிடாததால் தனது கட்சி தோல்வியடைந்ததாக அவர் கூறிவருகிறார். இதற்கு மாறாகப் பல ஆதாரங்கள் இருந்தாலும், தனது தோல்வியை ஒப்புக்கொள்ள அவர் மறுக்கிறார். பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு இடைக்காலத் தேர்தலுக்கு முந்தைய சில வாரங்களில், அமெரிக்கப் படைகளின் ராணுவ நடவடிக்கைகளும், டிரம்ப் அடிக்கடி வெளியிட்ட கடுமையான எச்சரிக்கைகளும் அதிகரித்தன. இதனால், அமெரிக்கா மீண்டும் இரானுடன் போரில் ஈடுபடத் தயாராகி வருகிறதா என்ற விவாதம் தீவிரமடைந்தது. தேர்தலுக்கு முந்தைய நாளில், வளைகுடா பகுதியில் உள்ள இரானுக்குச் சொந்தமான ஒரு தீவின் மீது அமெரிக்கா வரையறுக்கப்பட்ட அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கிறிஸ் மர்ஃபி, இரானுடன் மீண்டும் போர் தொடங்குவதற்கான சாத்தியமான ராணுவ நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்தத் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை வெளியிடாத அவர், அவற்றை 'பைத்தியக்காரத்தனமானவை' என்று விமர்சித்தார். மேலும், அவை மிக மோசமான அளவில் போர் தீவிரமடைய வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார். இரானின் பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய தாக்குதல்கள் சர்வதேசச் சட்டத்தின்படி போர்க்குற்றமாகக் கருதப்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளின் அதேபோன்ற முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இரான் மிகக் கடுமையான பதிலடித் தாக்குதல்களை நடத்தவும் வாய்ப்புள்ளது. அத்தகைய தாக்குதல்களுக்கு இலக்காகக்கூடிய நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதன்மையானதாக இருக்கலாம். அந்த நாடு அமெரிக்காவுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு இஸ்ரேலுக்கும் நெருக்கமாக உள்ளது. அமெரிக்காவின் அரசியல் நிலவரங்களை இரான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஹோர்மூஸ் நீரிணையை முடக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகள் அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்னையாக மாறியுள்ள நிலையில், இரான் தனது மகிழ்ச்சியை மறைக்கவில்லை. போர் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்கள் மீதான தாக்குதல்களால் பெட்ரோல், டீசல் முதல் விவசாய உரங்கள் வரை பல்வேறு பொருள்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. இதனால் டிரம்புக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் ஏற்பட்டுள்ள அரசியல் பாதிப்பை இரான் நன்கு அறிந்திருக்கிறது. இரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் சமூக வலைதளத்தில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துப் பதிவிட்டார். அதில், "மனசாட்சியையும் வாழ்க்கைச் செலவையும் கருத்தில் கொண்டு அமெரிக்கர்கள் போருக்கு 'வேண்டாம்' என்று கூறியுள்ளனர். இந்தச் செய்தியை நாங்களும் ஆதரிக்கிறோம். அமெரிக்க அரசு தனது மக்களின் விருப்பத்தைப் புறக்கணித்து, சர்வதேச அதிகார மையங்களுக்கும் மிரட்டல் விடுப்பவர்களுக்கும் ஆதரவாகச் செயல்பட்டால், எங்களது 'வேண்டாம்' என்ற பதில் ஒரு பயங்கரமான விளைவைக் கொண்டிருக்கும் என்பதை அது புரிந்துகொள்ளும்" என்று அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு இஸ்ரேலின் பொறுப்பு பிரதமராகச் செயல்பட்டு வரும் பெஞ்சமின் நெதன்யாகு, இரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்குமாறு டிரம்புக்கு நெதன்யாகு அழுத்தம் கொடுத்து வருகிறார். நெதன்யாகுவுக்கு இப்போது பதவிக்காலம் முடிவடையும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைப்பதற்குத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லை. ஆனால், இரானுடனான பெரிய அளவிலான போர் மீண்டும் தொடங்கி நீடித்தால், அதேசமயம் இஸ்ரேல் மக்கள் நேரடித் தாக்குதல்களுக்கு உள்ளானால், நெதன்யாகுவுக்கு வேறு அரசியல் வாய்ப்புகள் உருவாகலாம். அத்தகைய சூழலில், அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய 'தேசிய ஒற்றுமை' அரசாங்கத்தை அமைத்து, தனது கணிசமான அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அதைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவர் முயற்சிக்கலாம். பட மூலாதாரம், Getty Images டிரம்ப் தனது கவனத்தைத் திருப்பக்கூடிய மற்றொரு முக்கியமான மோதல், யுக்ரேன் - ரஷ்யா இடையிலான போர். இந்தப் போர், முதலாம் உலகப் போரை விடவும் நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகிறது. இடைக்காலத் தேர்தலுக்கு முன்பு, ரஷ்யாவிடம் இருந்து டீசல் வாங்குவதற்காக அந்நாட்டின் மீதான சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தியது. அமெரிக்க நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், ரஷ்யா மீதான தடைகளை மேலும் தளர்த்தவும், அந்த நடவடிக்கையை நீட்டிக்கவும் டிரம்ப் முடிவு செய்யலாம். ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களால் யுக்ரேன் பொதுமக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இந்தத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தேவையான அமெரிக்கத் தயாரிப்பான ஏவுகணை இடைமறிப்பு அமைப்புகளை வழங்குமாறு யுக்ரேன் கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த ஆயுதங்களுக்கான செலவை ஐரோப்பிய நாடுகள் ஏற்க முன்வந்துள்ளன. ஆனாலும், யுக்ரேன் எதிர்பார்க்கும் அளவிலும், அது விரும்பும் வகையிலும் அமெரிக்கா உதவவில்லை. இதனால் ரஷ்ய ஏவுகணைகள் அதிக எண்ணிக்கையில் யுக்ரேனை தாக்கி வருகின்றன. இருப்பினும், யுக்ரேன் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடி குறித்து டிரம்ப் பெரிதாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இடைக்காலத் தேர்தல் முடிவுகள், டிரம்ப் மேற்கொண்டு வருவதாக ரஷ்யா கூறும் 'அமைதி முயற்சிகளை' பாதிக்காது என்று நம்புவதாக ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், Getty Images டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். ரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்காக, யுக்ரேன் தனது சில பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். அத்தகைய ஒப்பந்தம், யுக்ரேன் அரசு சரணடைவதற்குச் சமமானதாக இருக்கும். தன்னால் தீர்த்துவைக்கப்பட்டு, முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போர்களின் பட்டியலில் இதையும் சேர்த்துக்கொள்ள டிரம்ப் விரும்புகிறார். உண்மையில், அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில போர்களை அவர் தீர்த்துவைத்ததாகக் கூறுவது நம்புவதற்குக் கடினமானது. தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட அதிருப்தியில் இருக்கும் டிரம்ப், தான் ஏற்கெனவே பலமுறை வலியுறுத்தியும் ஸெலென்ஸ்கி நிராகரித்துவரும் பிராந்திய விட்டுக்கொடுப்புகளை ஏற்குமாறு அவருக்கு மேலும் அழுத்தம் கொடுக்கலாம். வாஷிங்டன் டிசியில் தனக்கென நினைவுச் சின்னங்களைக் கட்டிக்கொண்டே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு அப்பால், டிரம்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நாம் கணிக்கும் எதுவும் தவறாகலாம் என்பதை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், வெள்ளை மாளிகையில் எஞ்சியிருக்கும் தனது பதவிக்காலத்தை அதிபருக்கான சாய்வு நாற்காலியில் அமர்ந்து அமைதியாகக் கழித்துவிடும் நபர் அவர் அல்ல என்பது மட்டும் உறுதி. அதிபராக இருந்த காலம் முழுவதும், டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தைப் பெரிதும் ரசித்ததுடன், அதை முழுமையாகப் பயன்படுத்தவும் விரும்பினார். அந்தப் போக்கு மாறப்போவதில்லை. அமெரிக்காவையே இனி தனது விருப்பப்படி ஆட்டிப்படைக்க முடியாவிட்டாலும், உலகத்தையே தன்னால் ஆட்டிப்படைக்க முடியும் என்பதை நிரூபிக்க அவர் முயற்சிக்க வாய்ப்புள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை