எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானது பற்றி... எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - X நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது. எவரெஸ்ட் சிகரப் பகுதியில் உள்ள பெரிச்சே என்ற இடத்தில் ஃபிஷ் டெயில் ஏர் மற்றும் டைனாஸ்டி ஏர் ஆகிய இரு தனியார் நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஃபிஷ்டெயில் ஏர் ஹெலிகாப்டரில் பயணித்த வெளிநாட்டுப் பயணி உயிரிழந்தார். அதன் கேப்டன் கே.சி. பிரஜ்வலும், ஏர் டைனஸ்டி ஹெலிகாப்டரின் கேப்டன் ரவீந்திர பிரஜாபதியும் காயமடைந்துள்ளார். உயிரிழந்த வெளிநாட்டுப் பயணி குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள சிம்ரிக் ஏர் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். Two helicopters crash at Pheriche in Everest region, one dead.TRAGEDY IN THE AIRAccording to officials, a Fishtail Air helicopter and an Air Dynasty helicopter collided while landing at the Pheriche helipad.âA passenger of Fishtail Air died and a captain sustained⦠pic.twitter.com/aredXGm8Pe தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗