அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை: “எந்தத் தொகுதிகளுக்கெல்லாம் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறோமோ, அந்த இடங்களுக்கு மட்டுமே சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமாகவே இதனை அவர் மேற்கொள்கிறார்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் விஜய்தான் முதல்வர், அவர் எல்லா தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும். ஆனால், எந்த தொகுதிகளுக்கெல்லாம் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறோமோ அந்த இடங்களுக்கு மட்டும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமாகவே இதனை அவர் மேற்கொள்கிறார். தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்துவிட்டது. இப்போது தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும். வளர்ச்சி குறைவாக இருந்த பல மாநிலங்களில் வளர்ச்சி அதிகமாகியுள்ளது. ஆனால், வளர்ச்சியடைந்த நம் மாநிலத்தில் ஜிஎஸ்டி வசூல் அதிகமாகியிருக்க வேண்டும். ஆனால் 3% மட்டுமே வளர்ச்சி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு தவெக அரசின் நிர்வாகக் கோளாறுதான் காரணம். நிர்வாகத் திறனற்ற அரசாக இந்த அரசு உள்ளதால் நமக்கு ஜிஎஸ்டி வருவாய் வசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசின் நலத்திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். தவெக ஆட்சிக்கு வந்தபின்னர் இந்த 6 மாத காலத்தில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் திறனற்ற அரசாக தவெக அரசு உள்ளது. தமிழக அரசின் நிர்வாகம் விஜய் ஆட்சியில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது” என்றார்.
“இடைத்தேர்தல் வரும் தொகுதிகளுக்கு மட்டுமே முதல்வர் நலத்திட்டங்கள் வழங்குகிறார்” - பழனிசாமி விமர்சனம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗