கைது செய்யப்பட்டவரை 24 மணிநேரத்துக்குள் ஆஜர்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு... உச்ச நீதிமன்றம் - கோப்புப்படம் ஒருவரை கைது செய்யப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்துக்குள் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தான் செப். 29, 2025 அன்று காவல்துறையால் காவலில் வைக்கப்பட்டதாகவும், ஆனால், செப். 30 தான் முறையாக கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ் சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒருவர் கைது செய்யப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். மேலும், ”கைதுக்கும் தடுப்புக் காவலுக்கும் இடையில் ஒரு செயற்கையான வேறுபாட்டை உருவாக்கும் எந்தவொரு முயற்சியும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படைப் பாதுகாப்பை நீர்த்துப்போகச் செய்யும் செயல். ஒருவர் செய்ததாகச் சந்தேகப்பட்டு, கைது செய்யும் அதிகாரியால் அவர் தடுத்து வைக்கப்படும் நொடியிலிருந்து 24 மணிநேரக் காலக்கெடு தொடங்குகிறது. அந்த நொடியே அவரது சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதன்படி, சட்டப்பிரிவு 22-இன் உட்பிரிவு (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள 'கைது மற்றும் தடுப்புக் காவல்’ ஆகிய சொற்கள் ஒத்த பொருளுடையவை” என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர். 24 மணி நேரக் காலக்கெடு என்பது முறையான கைது நடவடிக்கையிலிருந்து அல்ல, தடுப்புக்காவலிலிருந்தே தொடங்குகிறது ஒரு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படாமல் 24 மணி நேரத்திற்கு மேல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டால், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் நீதிபதி, நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான அவசியமான பயண நேரம் மட்டுமே விலக்களிக்கப்படலாம். தடுப்புக்காவலுக்கும் கைதுக்கும் இடையில் எந்தவொரு செயற்கையான வேறுபாடும் அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படாது 24 மணி நேரத்திற்குள் இருந்தாலும் கூட, தடுப்புக்காவல் பிரிவு 58 பிஎன்எஸ்எஸ்-இன் கீழ் அதற்கான காரணம் நியாயமானதாக இருக்க வேண்டும் நீதிபதிகள் தடுப்புக்காவலின் தேதி மற்றும் நேரத்தைப் பதிவுசெய்து, பிரிவு 22(2)-க்கு இணங்குவதை சரிபார்க்க வேண்டும் தடுப்புக்காவல் 24 மணி நேரத்திற்குள் இருந்தாலும் கூட, அது நியாயமான காலத்தை மீறும் பட்சத்தில், நீதிபதிகள் நீதிமன்றக் காவலை மறுக்கலாம் தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கைது செய்யப்பட்டவரை 24 மணிநேரத்துக்குள் ஆஜர்படுத்த வேண்டும்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗