“கிரீஸில் நண்டு போல் நகர்கிறார் லபுஷேன்” - குறித்து கிரெக் சாப்பல்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
“கிரீஸில் நண்டு போல் நகர்கிறார் லபுஷேன்” - குறித்து கிரெக் சாப்பல்

சச்சின் டெண்டுல்கர் உட்பட உயர்மட்ட கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஃபார்மை திடீரென இழந்து திண்டாடும் நோய்க்குறி பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், இந்திய முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான கிரெக் சாப்பல் பேசியுள்ளார். மார்னஸ் லபுஷேன் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் இருப்பதாக அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 3 ஆண்டுகளாக டெஸ்ட் சதம் காணவில்லை அவரது மட்டை. எப்படியாவது அவுட் ஆகிவிடும் வழிமுறைகளை அவர் தேர்ந்தெடுத்திருப்பதாக மூத்த ஆஸ்திரேலிய வீரர்கள் அவரைக் கேலி செய்வதோடு, அவரை நீக்க வேண்டும் என்று விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ‘Elite Players Decline Syndrome (EPDS)’ என்ற புதிய சொல்லாட்சியை உருவாக்கியுள்ள கிரெக் சாப்பல், மார்னஸ் லபுஷேன் இப்போது அடைந்திருக்கும் ஃபார்ம் சரிவு சச்சின் டெண்டுல்கர் போன்ற உயர்மட்ட வீரர்களுக்கும் ஏற்பட்டதுதான் என்று கூறுகிறார். இது போன்ற உயர்ரக வீரர்கள் தங்கள் உடல் தகுதிக்கு மீறி தங்கள் தொழில்பூர்வ கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்கும்போது இந்த ஃபார்ம் சரிவு ஏற்பட்டு அவர்களை முடக்கிவிடும் என்று கிரெக் சாப்பல் எச்சரிக்கிறார். ஆனால், அதேவேளையில் மார்னஸ் லபுஷேன் மீண்டு எழ, தன் ஃபார்மை மீட்டெடுக்கும் வழிமுறைகளையும் கிரெக் சாப்பல் பகிர்ந்துள்ளார். “ஒவ்வொரு உயர்ரக வீரரும் உயர்மட்ட கிரிக்கெட் வாழ்க்கையை விரிவுபடுத்தி நீண்டகாலம் ஆடும்போது இந்த எலைட் பிளேயர்ஸ் டிக்ளைன் சிண்ட்ரோம், அதாவது உயர்மட்ட வீரர்கள் ஃபார்ம் சரிவு நோய் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து விடுகின்றன. அவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். சச்சின் டெண்டுல்கர் சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார்... ‘ஏன் வயதானால் பேட்டிங் ரொம்பக் கடினமாகி விடுகிறது’ என்று. ஆனால் நான் சொன்னேன்... ‘நிச்சயம் சுலபமாக மாறும். வயதாக வயதாக பேட்டிங்கில் நாம் பாரம்பரிய அணுகுமுறைக்குத் திரும்பி விடுவோம். இதனால் தரமான பவுலர்களுக்கு எதிராக நம் விருப்பப்படி ரன்களை எடுக்க முடியாமல் போய் விடும். இதற்கு ஒரே வழி, வயதாகும்போது நம் இளவயது பேட்டிங் உத்தி போன்ற அப்போதைய நமது சிந்தனை நிகழ்முறைகளை மீட்டெடுக்க வேண்டும். நம் இளவயது சுயத்தை மீட்டெடுக்க வேண்டும். இது சொல்வதற்குச் சுலபம் நடைமுறையில் கடினம். மார்னஸ் லபுஷேனைப் பார்க்கும்போது இப்போது எனக்கு அன்று சச்சின் கண்ட ஃபார்ம் சரிவு போல்தான் தோன்றுகிறது. அதுவும் அவர் தான் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறும்போதெல்லாம் அவர் ஃபார்மை அவர் உடனடியாக மீட்டெடுக்க முடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது. முதலில் அனாயசமாக சதம் எடுத்த உடம்பு இப்போது 40 ரன்கள் எடுக்கவே படாத பாடு பட வேண்டியிருக்கிறது. மனரீதியான தவறுகள் தான் அவரை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது. மார்னஸ் தனது உச்சக்கட்ட ஆட்டத்திறனில் இருந்தபோது, அவரது கால்களின் நகர்வைப் பார்ப்பது நடன மேடையில் ஜான் டிராவோல்டாவின் நடன அசைவுகளைக் காண்பது போல இருக்கும். பந்துவீச்சாளரின் கையிலிருந்து பந்து வெளியேறும்போதே அதை உன்னிப்பாகக் கவனிப்பார். பந்துவீச்சாளரின் உடல்மொழியிலிருந்து கிடைக்கும் குறிப்புகளையும் கணித்து, தனக்குச் சாதகமான பந்துகளைப் பாய்ந்து சென்று அடிப்பார். அப்போது அவரது பேட்டிங் நிலை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். கால்களின் முன்பகுதியில் மட்டுமே உடல் எடையைத் தாங்கி நின்று, மின்னல் வேகத்தில் கால்களை நகர்த்துவார். பந்தின் திசையைத் துல்லியமாகக் கணித்து, பந்து பிட்ச் ஆன இடத்துக்கே விரைவாகச் சென்று அடிப்பார். ஏறக்குறைய ஒவ்வொரு பந்தையும் தாக்கி ஆடக்கூடிய திறன் அவரிடம் இருந்தது. பந்தைச் சரியான நேரத்தில் அடிப்பதும், இடைவெளி பார்த்து பந்தைச் செலுத்துவதும் அவரது தனிச்சிறப்பாக இருந்தன. ஆனால், இப்போது அவரது ஆட்டத்தைப் பார்க்கும்போது, கிரீஸில் நண்டு நகர்வதைப் போன்றே நகர்கிறார். பந்தை பேட்டால் எதிர்கொள்ளும் இடமும் பெரும்பாலும் பேட்டிங் கிரீஸுக்கு முன்னால் இருப்பதில்லை. முன்பு கிரீஸிலிருந்து சுமார் ஒரு மீட்டர் முன்னால் வந்து, முழுமையான பேட் வீச்சுடன் பந்தை எதிர்கொண்டவர், இப்போது கைகளை மட்டும் நீட்டி பந்தைத் தேடித் தடுமாறுகிறார். முன்பெல்லாம் பூனைபோல வேகமாகவும் லாவகமாகவும் நகர்ந்த அவரது கால்கள், இப்போது அசைவற்றுக் காணப்படுகின்றன. ஆடுகளத்தின் பாதி தூரத்தைக் கடக்கும் வரை பந்தின் வேகத்தையும் திசையையும் அவர் சரியாகக் கணிப்பதில்லை என்றே தோன்றுகிறது” என்று கிரெக் சாப்பல் கூறினார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை