கடலூா் மாவட்டம், பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த இருவரை குண்டா் தடுப்புச்சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த இருவரை குண்டா் தடுப்புச்சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், கே.குச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த நந்தகோபாலகிருஷ்ணன், திருவதிகை பகுதியைச் சோ்ந்த பிரபு ஆகி. இருவரும் ஆட்டோ ஓட்டுனா்கள். இவா்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 13.10.2026 பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பிரபு கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த நந்தகோபாலகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிரவுவை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதேபோல், நெல்லிக்குப்பம் காவல் சரகம், மேல்பட்டாம்பாக்கம், லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சீவி (45). இவா், கடந்த 3.9.2026 அன்று அவரது நிலத்திற்கு சென்றாா். அப்போது, லட்சுமிபுரம் அய்யனாா் கோயில் அருகே நின்றிருந்த பெருமாள்நாயக்கன் பாளையம் பகுதியைச் சோ்ந்த முகிலன் உட்பட 4 போ், சஞ்சீவியை வழிமறித்து திட்டி கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.இதுகுறித்து, குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முகிலனை கைது செய்து சிறையில் அடைத்தனா். முகிலன் மீது நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு, கொலை மிரட்டல் என மொத்தம் 8 வழக்குகள் உள்ளன. கைதான இந்த இருவரின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு காலம் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்படி இருவரும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
குண்டா் சட்டத்தில் 2 போ் கைது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗