பஞ்சாப் பிரசாரத்தில் பகவந்த் மானை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தது பற்றி... பஞ்சாப் பிரசாரத்தில் ராகுல் காந்தி - PTI பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மக்களவை உறுப்பினராக இருந்தபோது மது அருந்துவிட்டு வந்தார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை விமர்சித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, மாநிலத்தில் நிலவும் போதைப்பொருள் அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பாக விமர்சனத்தை முன்வைத்தார். அவர் பேசியதாவது: “ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தபோது, நீங்கள் அக்கட்சியின் மீதும், முதல்வர் பகவந்த் மான் மீதும் நம்பிக்கை வைத்தீர்கள். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதாக அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர். அவர்கள் எங்கே போதைப்பொருளை ஒழித்தார்கள்? பஞ்சாபின் எந்தப் பகுதியிலிருந்து போதைப்பொருளை அவர்களால் அகற்ற முடிந்தது? இந்த அச்சுறுத்தலை ஒழிக்க அவர்களுக்குத் துளியும் திறனில்லை. பஞ்சாப் மாநிலம் தில்லியிலிருந்து இயக்கப்படுகிறது. பகவந்த் மானுடன் நான் மக்களவையில் பணியாற்றியிருக்கிறேன். அவர் எங்களுடன் அமர்ந்து, ங்கேயே நகைச்சுவைகளைப் பேசி மகிழ்வார். காலை 11 மணிக்கே, அவர் பேசும்போது மதுவின் வாடை வீசும். பகவந்த் மான் மது அருந்தக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அவர் மது அருந்த விரும்பினால், அது முற்றிலும் அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், போதைப்பொருள் பழக்கம் எனும் தீமையை நீங்கள் உண்மையிலேயே ஒழிக்க விரும்பினால், உங்கள் முதலமைச்சர் ஒவ்வொரு மாலையிலும் போதையில் இருக்கக்கூடாது. பஞ்சாபுக்காகப் போராடக்கூடிய, போதைப்பொருட்களால் ஏற்படும் துயரத்தை உண்மையாக உணர்கிற, பஞ்சாபின் வலியைத் தன் இதயத்தில் சுமக்கக்கூடிய ஒரு தலைவர் உங்களுக்குத் தேவை” எனத் தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
மது அருந்திவிட்டு மக்களவை வந்தவர் பகவந்த் மான்! ராகுல் காந்தி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗