முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Business ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்

மும்பை: முகேஷ் அம்பானி வென்றதற்கும் அனில் அம்பானி திவாலை நோக்கிச் சென்றதற்கும் என்ன காரணம்? திருபாய் அம்பானி மறைந்த பின்னர் சொத்து பிரிக்கப்பட்டது. அன்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் அனில் அம்பானி. ஆனால் முகேஷ் அம்பானி ஜியோ என்ற சாம்ராஜ்யத்தை நிறுவி, அதனையே பிராண்டாக்கி உலகப் பணக்காரர் ஆகிவிட்டார். ஆனால் அனில் அம்பானி கடனில் விழுந்து மீள முடியாமல் தவிக்கிறார். திவால் நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார். கொரோனா காலத்தில் உலகே நஷ்டத்தில் இருந்தபோது, லாபம் சம்பாதிக்கத் தடுமாறியபோது, முகேஷ் அம்பானி வென்றுள்ளார். அனில் தோற்க என்ன காரணம், முகேஷ் அம்பானி ஜெயிக்க என்ன துணிச்சல் காரணம் என்பதைப் பார்ப்போம். இந்தப் பிரச்சினைகளை 18 வருடங்கள் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போம். 2008-ல் உலகின் ஆறாவது பணக்காரராக இருந்த அனில் அம்பானி, இன்று திவால் நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார். ஆனால் கொரோனா பெருந்தொற்றால் உலகமே தடுமாறியபோது, முகேஷ் அம்பானி மட்டும் எப்படி உலகையே வாயடைக்கச் செய்யும் வகையில் துணிச்சலாகச் செயல்பட்டு சம்பாதித்தார் என்பதுதான் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்கள். முகேஷ் அம்பானியின் வெற்றிக்கும், அனில் அம்பானியின் தோல்விக்குப் பின்னால் இருக்கும் காரணங்களைப் பார்ப்போம். இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான திருபாய் அம்பானி 2002-ம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாகம் தொடர்பாக மூத்த மகன் முகேஷ் அம்பானிக்கும், இளைய மகன் அனில் அம்பானிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தப் பிரச்சினை பெரிதான நிலையில், 2005-ம் ஆண்டு தாய் கோகிலாபென் அம்பானியின் தலையீட்டில் இருவருக்கும் இடையே சொத்துகளும் நிறுவனங்களும் பிரிக்கப்பட்டன. அப்போது அரசாங்கம் தலையிட்டதாகவும் சொல்லப்பட்டது. எனினும், குடும்ப ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் சொத்துகள் பிரிக்கப்பட்டன. முகேஷ் அம்பானிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பெட்ரோலியம், எண்ணெய் சுத்திகரிப்பு, இயற்கை எரிவாயு, பெட்ரோ கெமிக்கல்ஸ் உள்ளிட்ட தொழில்கள் கிடைத்தன. அனில் அம்பானிக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், மின்சாரம், நிதிச் சேவைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் கிடைத்தன. அப்போது எல்லாருமே அனில் அம்பானிக்குத்தான் மிகப்பெரிய சாம்ராஜ்யம் கிடைத்ததாக நம்பினார்கள். ஏனெனில் அன்றைக்கு மின்னல் வேகத்தில் வளர்ந்து வந்த தொலைத்தொடர்புத் துறை அவரது வசம் இருந்தது. அப்போதுதான் இந்தியாவில் செல்போன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வந்த காலம் அது. அதே நேரத்தில் முகேஷ் அம்பானியிடம் இருந்த எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ் போன்ற தொழில்கள் ஏற்கெனவே பெரிய முதலீடுகளையும் வருவாயையும் கொண்டிருந்தன. ஆனால் அடுத்த 15 ஆண்டுகளில் இந்த இரு சகோதரர்களின் வாழ்க்கையும் முற்றிலும் மாறப்போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது. அனில் அம்பானி வசம் இருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஒரு காலத்தில் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வந்தது. குறைந்த விலையில் செல்போன் சேவைகளை வழங்கி, மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தை உருவாக்கியிருந்தது. ஆனால் தொழில்நுட்ப மாற்றம் வந்தபோது, அதனைச் சரியான நேரத்தில் எதிர்கொள்வதில் நிறுவனம் தடுமாறியது. நோக்கியா எப்படி அப்போது தடுமாறியதோ, அதுபோல் ரிலையன்ஸும் தடுமாறியது. ஏனெனில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பெருமளவில் CDMA தொழில்நுட்பத்தை நம்பியிருந்தது. இந்திய தொலைத்தொடர்புத் துறை GSM தொழில்நுட்பத்தை நோக்கியும், பின்னர் அதிவேக மொபைல் இணையத்தை நோக்கியும் நகர்ந்தது. ஆனால் அந்த மாற்றத்துக்கு ஏற்ப நிறுவனத்தை வலுப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதற்கிடையில், தொலைத்தொடர்பு வணிகத்தில் போட்டியும் கடுமையாக அதிகரித்தது. ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் சந்தையில் வலுவாக மாறத் தொடங்கின. மறுபுறம், அனில் அம்பானியின் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு மட்டுமின்றி மின்சாரம், கட்டமைப்பு, நிதிச் சேவைகள் எனப் பல துறைகளிலும் கால்பதித்தன. இந்த விரிவாக்கத்துக்குப் பெருமளவில் கடன் வாங்க வேண்டிய நிலை அனில் அம்பானிக்கு ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பல ஆயிரம் கோடிகளைப் பெரிய திட்டங்களில் முதலீடு செய்தார். ஆனால் எதிர்பார்த்த வேகத்தில் வருவாய் அவருக்குக் கிடைக்கவில்லை. கடனுக்கான வட்டியும் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைகளும் அதிகரித்தன. இதுதான் அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியது.ஆனால், பருவத்தே பயிர் செய் என்ற பழமொழிக்கு ஏற்ப முகேஷ் அம்பானி ஆரம்பித்ததுதான் ஜியோ. இங்கேதான் கதையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படுகிறது. 2005-ல் பிரிக்கப்பட்ட குடும்ப ஒப்பந்தத்தின்படி, முகேஷ் அம்பானி தொலைத்தொடர்புத் துறையில் நேரடியாகப் போட்டியிடுவதற்குச் சில கட்டுப்பாடுகள் இருந்தன. 2010-ல் அந்தப் போட்டித் தடை நீக்கப்பட்ட பிறகு, முகேஷ் அம்பானி மீண்டும் தொலைத்தொடர்புத் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்தியாவின் எதிர்காலம் வெறும் குரல் அழைப்புகளில் இல்லை; இணையத்தில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார். அதற்காக 4G தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய முதலீட்டை மேற்கொண்டார். யாருமே நம்ப மாட்டார்கள். ஆனால் அவர் போட்ட காசு மிகப்பெரியது. ஜியோவின் 4G கட்டமைப்பை உருவாக்க அடுத்த ஏழு ஆண்டுகளில் 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முகேஷ் அம்பானி முதலீடு செய்தார். 2016-ல் முகேஷ் அம்பானியின் ஜியோ வணிக ரீதியாக அறிமுகமானது. அன்லிமிடெட் இலவச குரல் அழைப்புகள், அன்லிமிடெட் இணையம் என்று அறிவித்தார். அவ்வளவுதான்! இந்திய தொலைத்தொடர்புச் சந்தையையே அது தலைகீழாக மாற்றியது. ஜியோ வருவதற்கு முன்பு ஒரு ஜிபி இணையத்துக்கு மக்கள் அதிகம் செலவழித்தார்கள். ஜியோவின் வருகைக்குப் பிறகு டேட்டா கட்டணங்கள் கடுமையாகக் குறையத் தொடங்கின. மக்கள் அதிக அளவில் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். 2018-ம் ஆண்டுக்குள் ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 22.7 கோடியைத் தாண்டியது. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், முகேஷ் அம்பானி தொலைத்தொடர்புத் துறையில் ஏற்கெனவே வெற்றிபெற்ற நிறுவனத்தை வாங்கி வளர்க்கவில்லை. புதிய 4G கட்டமைப்பை ஆறு ஆண்டுகளாக உருவாக்கி வந்தார். அதன்பிறகே, மிகப்பெரிய முதலீட்டுடன் சந்தையில் நுழைந்தார். ஆரம்பத்தில் பெரும் செலவு செய்தாலும், நீண்டகாலத்தில் டிஜிட்டல் சேவைகள் மூலம் கிடைக்கப்போகும் வாய்ப்புகளை நம்பினார். இதுதான் அவரது மிகப்பெரிய துணிச்சல். இந்தத் துணிச்சல்தான் முகேஷ் அம்பானியின் வெற்றிக்குக் காரணமாக மாறியது. ஆனால் இங்கே அறிய வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அனில் அம்பானியின் வீழ்ச்சிக்கு ஜியோ மட்டுமே காரணம் கிடையாது. ஜியோவின் வருகை அனில் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது என்பது உண்மை என்றாலும், அனில் அம்பானியின் வீழ்ச்சிக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏற்கெனவே வாங்கிய பெரிய கடன் சுமைதான் முக்கியக் காரணம்.' தொழில்நுட்ப மாற்றம், அதிகரித்த போட்டி, தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட விலை மாற்றம், முதலீடு மற்றும் வருவாய் இடையிலான சமநிலையின்மை ஆகியவைதான் அனிலுக்குப் பிரச்சினையானது. 2017-ம் ஆண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் சுமையைக் குறைப்பதற்காக தனது தொலைத்தொடர்பு சொத்துகளை ஜியோவுக்கு விற்க ஒப்பந்தம் செய்தார் அனில் அம்பானி. ஆனால் கடன் வழங்கிய வங்கிகளின் ஒப்புதல் மற்றும் அரசு அனுமதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளால் அந்த ஒப்பந்தம் 2019-ல் கைவிடப்பட்டது. அப்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் திவாலை நோக்கிச் சென்றது. இதனிடையே, மறுபக்கம் அனில் அம்பானியின் மின்சாரம், கட்டமைப்பு, நிதிச் சேவை நிறுவனங்களும் கடன் நெருக்கடியில் சிக்கின. ஒரு நிறுவனத்தின் பிரச்சினை மற்ற நிறுவனங்களையும் பாதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியது. மறுபுறம், உலகமே கொரோனாவில் தடுமாறியபோது முகேஷ் அம்பானி மட்டும் உலக நிறுவனங்களையெல்லாம் அசர வைக்கும் அளவிற்கு சம்பாதித்தார். பல நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தன. முதலீடுகள் குறைந்தன. வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டபோது, முகேஷ் அம்பானி நெருக்கடிக்கு மத்தியில் எப்படி சம்பாதிப்பது என்று கிளாஸ் எடுத்தார்.இதனால் ஜியோவின் பங்குகளை உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் போட்டி போட்டி வாங்கின. பேஸ்புக், கூகுள், சில்வர் லேக், KKR, அபுதாபியின் முபதாலா உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய முதலீட்டாளர்கள் ஜியோவில் முதலீடு செய்தார்கள். 2020 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டுமே ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் 13 முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 1.52 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்தது. இதில் பேஸ்புக் மட்டும் சுமார் 43,574 கோடி ரூபாய் முதலீடு செய்தது. கூகுள் சுமார் 33,737 கோடி ரூபாய் முதலீடு செய்து ஜியோவில் 7.73 சதவீதப் பங்குகளைப் பெற்றுள்ளதாக சொல்கிறார்கள. இதுமட்டுமின்றி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது உரிமைப் பங்கு வெளியீட்டின் மூலமும் 53,124 கோடி ரூபாய் திரட்டியது. மொத்தமாக 2020 ஜூன் மாதத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் 58 நாட்களில் 1.68 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியைத் திரட்டியது. 2020 மார்ச் இறுதியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகரக் கடன் 1,61,035 கோடி ரூபாயாக இருந்தது. இந்த சிங்கிள் முதலீடுகள் மூலம் நிறுவனம் தனது நிகரக் கடனை முழுமையாகக் குறைத்து, 2020 ஜூன் மாதத்திலேயே நிகரக் கடனற்ற நிறுவனமாக மாறியதாக முகேஷ் அம்பானி அறிவித்தார். இதுதான் முகேஷ் அம்பானியின் மிகப்பெரிய வெற்றி. இப்போது ஜியோ பங்குகளை வெளியிட்டார். அதுவும் இந்தியாவின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பங்காக அடையாளம் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் என்பது ஜியோ என்ற அடையாளமாக மாறி உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி என்பதைத் தாண்டி, ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி என்பதாக அடையாளமாகி வருகிறது. முகேஷ் வென்றதற்கும் அனில் தோற்றதற்கும் அடிப்படைக் காரணம் என்னவென்றால், முகேஷ் அம்பானி எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்து, போட்டியாளர்கள் சுதாரிப்பதற்குள் மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கியது தான். முகேஷ் அம்பானி எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் தொழிலில் மட்டும் நின்றுவிடாமல், டிஜிட்டல் இந்தியாவின் எதிர்காலத்தை உணர்ந்து ஜியோவைக் கொண்டு வந்தது தான் முகேஷின் வெற்றிக்கு முக்கியமான காரணம். முகேஷ் அம்பானியிடம் ஏற்கெனவே வலுவான எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் தொழில்களில் வருமானம் கொட்டியது. இதனால்தான் புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும் கடன் திரட்டவும் முகேஷ் அம்பானியால் முடிந்தது. ஆனால் அனில் அம்பானியோ பல்வேறு துறைகளில் விரிவாக்கம் செய்தபோது கடன் சுமையால் பாதிக்கப்பட்டார். அதேபோல் அவர் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காத காரணத்தால் நெருக்கடி நிலைக்குப் போய்விட்டார். சரியான நேரத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும். தொழில்நுட்பம் வளருகிறது என்றால், அதற்கு ஏற்ப மாற வேண்டும். குறுகிய இலக்குடன் பயணிக்காமல் நீண்ட காலத்திற்கு ஏற்ப திட்டமிட வேண்டும். அப்படிப் பயணித்தால் ஜெயிக்கலாம் என்பதற்கு முகேஷ் அம்பானி உதாரணமாக இருக்கிறார். இதுதான் முகேஷ் அம்பானி - அனில் அம்பானி ஆகிய அண்ணன் தம்பிகளின் பயணம் சொல்லும் பாடம் ஆகும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை