மன்னார்குடி அருகே அரசுப் பள்ளி முன்னாள் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 150 சவரன் நகை திருட்டு. கோட்டூர் கருப்புக்கிளாரில் நகைகள் திருட்டு நடைபெற்ற முன்னாள் ஆசிரியர் வீடு. - படம்: தினமணி மன்னார்குடி அருகே அரசுப் பள்ளி முன்னாள் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 150 சவரன் நகையை மர்மநபர்கள் திருட்டிச்சென்றிருப்பது வியாழக்கிழமை தெரியவந்துள்ளது. கோட்டூர் கருப்புக்கிளார் மேட்டுத்தெரு ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் வி.கோவிந்தராஜ் (61). மனைவி விமலா, மகன் விக்னேஷ், மகள் யோகலெட்சுமி இருவருக்கும் திருமணம் ஆகிய வெளியூரில் வசிக்கின்றனர். இந்த நிலையில், தீபாவளி வரிசை வைப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு ஓசூரில் உள்ள மகள் வீட்டிக்கு கோவிந்தராஜ், விமலா இருவரும் செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டனர். மீண்டும், வியாழக்கிழமை ஊருக்கு திரும்பி வந்து வீட்டைபார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன் பீரோவில் வைத்திருந்த 150 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து,கோட்டூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆய்வாளர் மோகன் வழக்குப் பதிந்தார். திருட்டு நடைபெற்ற வீட்டை, திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பவானியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், திருவாரூரிலிருந்து தடவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் கொண்டு போலீஸார் சோதனை செய்தனர். நகைகளை திருடிய மர்மநபர்கள் தடயங்களை அழிப்பதற்காக, வீட்டில் பல்வேறு இடங்களில் மிளகாய் பொடியினை தூவிவிட்டு சென்றுள்ளனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் ஆசிரியர் வீட்டில் 150 சவரன் நகை திருட்டு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗