நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது குறித்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் குர்னூர் பிரார் பேசியுள்ளார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் குர்னூர் பிரார் - படம் | பிசிசிஐ நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது குறித்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் குர்னூர் பிரார் பேசியுள்ளார். இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நேற்று (நவம்பர் 4) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெடுட்டுகளைக் கைப்பற்றினார். குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் மற்றும் அன்ஷுல் கம்போஜிடம் ஆலோசனை செய்து பந்துவீசியது சிறப்பாக செயல்பட உதவியதாக வேகப் பந்துவீச்சாளர் குர்னூர் பிரார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் என்னுடைய முதல் ஓவரில் தவறான லென்த்தில் பந்துவீசியதால் சிக்ஸர் சென்றது. அதன் பின், சரியான லென்த்தில் பந்துவீசினேன். இந்த ஆடுகளத்தில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் மற்றும் அன்ஷுல் கம்போஜிடம் ஆலோசனை செய்தேன். நீங்கள் உயரமாக இருப்பதால் ஹார்ட் லென்த்தில் பந்துவீசினால், பந்தில் பௌன்சர் இருக்கும் எனக் கூறினார்கள். அவர்களது அறிவுரை விக்கெட் வீழ்த்துவதற்கு உதவியாக இருந்தது. இங்குள்ள ஆடுகளங்கள் பந்துவீசுவதற்கு நன்றாக உள்ளது. ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு 4 அல்லது 5 நாட்களுக்கு முன்பாக நாங்கள் பயிற்சியைத் தொடங்கிவிட்டோம். அதனால், முதல் ஒருநாள் போட்டியில் நன்றாக செயல்பட முடிந்தது. என்னுடைய பந்துவீச்சு ஸ்டைல் மற்றும் பலத்தின் மீது நம்பிக்கை வைத்து பந்துவீசினேன். அதற்கான முடிவுகள் கிடைத்துள்ளது என்றார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது எப்படி? ரகசியம் பகிர்ந்த குர்னூர் பிரார்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗