பாரதப் பண்பாட்டின் பிரகாசம்-தீபாவளி!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பாரதப் பண்பாட்டின் பிரகாசம்-தீபாவளி!

நாளும் உத்சவம் மாதமும் பண்டிகை என்பது கோயில்கள் நிறைந்த தமிழகத்தின் தனிச்சிறப்பு. அப்படிக் கொண்டாடும் பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி. நாளும் உத்சவம் மாதமும் பண்டிகை என்பது கோயில்கள் நிறைந்த தமிழகத்தின் தனிச்சிறப்பு. அப்படிக் கொண்டாடும் பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி. கார்கால இருளை அகற்றி ஒளியேற்றும் திருநாள். நாடெங்கும் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. பன்முகத்தன்மையும் பரந்துபட்ட பண்பாடும் வண்ணமயமான கலாசாரமும் கொண்ட பாரத தேசத்தில் தீபாவளி பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது. என்றாலும், 'தர்மம் வெல்லும், அதர்மம் வீழும்' என்ற ஒற்றைச் சிந்தனையிலான இந்தப் பண்டிகை தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்துகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தப் பண்டிகை தொடர்வதே மனிதகுலம் இருளிலிருந்து ஒளியை நோக்கிய பயணத்தைக் காலம் காலமாக மேற்கொண்டு வருவதற்கான அடையாளம். உயிரோட்டத்துடன் பாரதத்தின் பண்பாட்டு வேர்கள் இருப்பதற்கான நம்பிக்கை. தீபாவளிக் கொண்டாட்டம் கைவினைக் கலைஞர்கள் தொடங்கி தெருவோரம் சிறுதொழில் செய்வோர்வரை மக்கள் அனைவரின் உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பாக அமைகிறது. எல்லாரும் வளமோடும் மகிழ்வோடும் வாழ உரிமை உடையவர்கள் என்ற சிந்தனையுடன் புத்தாடைகள், இனிப்புகள் என நம் கொண்டாட்டத்தில் இயலாதவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்று வள்ளுவப் பேராசான் கூறும் நமது பண்பாட்டு விழுமியத்தை மனதில் கொண்டு தீபாவளியைக் கொண்டாடுவது தமிழர் அறமாகிறது. ஏனெனில், பண்பு என்னும் ஒளியால் மனதைப் பிரகாசமாக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பண்டிகை தீபாவளி. சுற்றுச்சூழல் குறித்த சிந்தனை என்று வாணவேடிக்கைகள் கூடாது என்கிற கருத்து அண்மைக்காலமாக முன்வைக்கப்படுகிறது. ஒரே நாளில் உலகச்சூழல் மாசுபடும் என்ற கருத்து ஏற்புடையதல்ல.. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தைப் பொருத்தவரை தீபாவளியன்று முன்னோரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி இல்லங்களில் பிரார்த்தனைகள் மேற்கொள்வதும் படையலிடுவதும் முதன்மையானவை. அந்த நம்பிக்கைகளின் ஒருபகுதியாக முன்னோர் மேலுலகம் செல்ல வழிகாட்ட வான்நோக்கிய வெளிச்சம் தர வேண்டியது குடும்பத்தாரின், வாரிசுகளின் கடமை. அதற்காகவே தீபாவளித் திருநாளில் அனைவரும் மத்தாப்புகளையும் பட்டாசுகளையும் பயன்படுத்துகிறோம். நம்பிக்கைகள் அடுத்தடுத்த தலைமுறைகளைச் சென்று சேர வேண்டியது அவசியம். பல்வேறு மொழிகள், மதங்கள் என வண்ணமயமான கலாசாரம் கொண்ட பாரத தேசத்தின் வட பகுதிகளில் ஸ்ரீராமர் 14 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துக் கொண்டு அயோத்திக்குத் திரும்பியதையும், ராமரின் வெற்றியை நினைவுகூரும் வகையிலும் கொண்டாடப்படுகிறது. அயோத்தி மக்கள் தங்களின் அன்புக்கும் பக்திக்கும் உரிய ஸ்ரீராமரை வரவேற்கும் விதமாக அகல் விளக்குகளை ஏற்றி வரவேற்றனர். இன்றும் மக்கள் அதைத் தொடர்கின்றனர். புராணங்களில் வரும், கைலாய மலையில் சிவபெருமானும் பார்வதி தேவியும் பகடையாடி மகிழ்ந்த நிகழ்வையும், கோகுலத்தில் ராதையும் கிருஷ்ணரும் விளையாடியதையும் நினைவுகூரும் வகையில் வட இந்தியாவில் இல்லங்களில் அதே விளையாட்டுகளை தீபாவளியன்று விளையாடுகிறார்கள். இந்த நாளில் பெண்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்ற வழக்கமும் இருக்கிறது. பெண்களின் வெற்றியை இல்லங்களில் கொண்டாடுவதும் அவர்களின் வெற்றியே குடும்பத்தின் வெற்றி என்ற நம்பிக்கையும் நம் பாரம்பரியம். பெண்கள் கொண்டாடப்படுவதில்தான் பண்டிகையின் பெருமை இருக்கிறது. நாட்டின் தென் பகுதிகளில் நரகாசுரனை கிருஷ்ணர் வெற்றி கொண்டதையும் முக்தி அளித்ததையும் கொண்டாடும் வைபவமாக தீபாவளி சிறக்கிறது. கிருஷ்ணன் நரகாசுரனுடன் போர்புரிய சத்தியபாமாவுடன் புறப்படுகிறார். இந்தப் போரில் சக்தியின் அவதாரமாக நின்று தீமையை அழிக்க சத்தியபாமா முன்னிற்கிறாள். ராமாயணமும் மகாபாரதமும் தேசத்தை இன்றும் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. தர்மம் வெல்லும் எனும் நம்பிக்கையின் ஒளி சுடர் விடுவதைக் காண்கிறோம். ஆணும் பெண்ணும் இணைந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற சிந்தனை நம் முன்னோருக்கு இருந்தது. பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும். அவர்களின் உழைப்பில்தான் குடும்பம் மகிழ்ச்சி அடைய முடியும் என்பதையும் தமிழ் மண்ணில் தீபாவளிக் கொண்டாட்டம் உறுதிப்படுத்துகிறது. இந்தப் பாடத்தை நாம் கற்றுக் கொள்வதற்காகவே பண்டிகை தொன்றுதொட்டு வருகிறது. பாரதத்தின் மேற்குப் பகுதிகளில் தீபாவளியை புதிய தொடக்கம் என்று நம்புகின்றனர். மஹாலக்ஷ்மி துரதிருஷ்டங்களைப் போக்கி சிறந்த ஒளிமயமான எதிர்காலத்தைத் தர வருகிறாள் என்ற நம்பிக்கையுடன் பூஜைகளும் தீப வரிசைகளுமாக சிறப்பான முறையில் மக்கள் கொண்டாடுகின்றனர். குடும்பத்தினர் அனைவரும் செல்வ வளமும் செழிப்பும் பெருக மகாலட்சுமியின் அருளைப் பெற வேண்டி வழிபடுகின்றனர். அகல் விளக்குகள் எளிமையானவை. ஆனால், இருளை அகற்றி மனிதகுலத்துக்கு வழிகாட்டும் வல்லமை கொண்டவை. கிழக்குப் பகுதிகளில் மேற்கு வங்கம், ஒடிஸô மாநிலங்களில் காளி தேவி வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. தீய சக்திகளை வென்ற காளி அன்னையின் வெற்றியைக் கொண்டாடுவதே தீபாவளி. இங்கும் தர்மம் வெல்லும் என்பதே கொண்டாட்டத்தின் அடிநாதம். அதோடு, கி.மு.527-ஆம் ஆண்டில், சமண தீர்த்தங்கரரான மகாவீரர் முக்தி அடைந்ததை நினைவுகூரும் நாளாக சமணர்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். மகாவீரரின் ஞான ஒளியைக் குறிக்க அவர்கள் விளக்குகளை ஏற்றி வழிபடுகின்றனர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்யார் பத்ரபாகு என்ற சமண முனிவர் பிராகிருத மொழியில் எழுதிய 'கல்பசூத்திரம்' என்ற நூலில், 'மகாவீரர் என்ற தீப ஒளி மறைந்துவிட்டதால் தீப விளக்கை ஏற்றி வைப்போம் என்று எழுதி இருக்கிறார். சமணத் துறவி சோமதேவர் எழுதிய யசஸ்திலகம் நூலில் தீபாவளி கொண்டாட்டம் பற்றி விரிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. மாமன்னர் அசோக சக்கரவர்த்தி புத்த மதத்தைத் தழுவி அன்பை போதிக்கத் தொடங்கிய நாள் என்பதால், பெüத்தர்களும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். சீக்கிய மக்களோ 1619-ஆம் ஆண்டில், குரு ஹர்கோவிந்த் சிங் மற்றும் 52 இளவரசர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளில் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் கொண்டாடுகின்றனர். தீபாவளியன்று அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் ஆயிரக்கணக்கான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்கிறது. நான்கு திசைகளிலும் தேசத்தின் மக்கள் அனைவரிடமும் உன்னதமான ஒரே சிந்தனை, சுபிட்சத்தை நோக்கிய பார்வை என தீபாவளித் திருநாள் அமைந்திருக்கிறது. தீபாவளியை எப்போதிலிருந்து கொண்டாடுகிறோம்? யுக யுகங்களாய் கொண்டாடுகிறோம் என்று புராணங்களும் இலக்கியங்களும் சொல்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட இலக்கியங்கள் தீப வரிசைத் திருநாளை மக்கள் கொண்டாடிய விதங்களைப் பட்டியலிடுகின்றன. காஷ்மீரின் புராதன புராண நூலான நீலமத புராணம் தீபாவளியைப் பற்றிச் சொல்கிறது. பவிஷ்யோத்தர புராணம், அமாவாசை நாளை மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்த நாளாக வர்ணிக்கிறது. பெண்கள் துரதிருஷ்டத்தைத் துரத்தி விட்டு, லட்சுமி தேவியை வழிபட்டு சுபிட்சத்தை வரவேற்பதாகக் கூறுகிறது. தீபாவளி அன்று கங்கை எல்லா இடத்திலும் நமக்காக பிரவகிக்கிறாள். அன்று நாம் கங்கா ஸ்நானம் செய்கிறோம் என்ற நம்பிக்கையைச் சொல்கிறது. இன்றும் கங்கா ஸ்நானம் ஆயிற்றா என்பதே தீபாவளி அன்றைய முதல் நலன் விசாரிப்பு என்பதில் பண்டிகைகள் கலாசாரத்தின் சிறப்பைப் பாதுகாப்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னதாக மத்திய ஆசியாவிலிருந்து வந்த பயணி அல்பெரூணி, பாரதத்தில் 12 ஆண்டுகள் தங்கியிருந்து நம்முடைய மொழிகள், தத்துவம், அறிவியல், கணிதம், வானியல், புவியியல், மக்களின் வாழ்வியல் வழக்கங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து விரிவாக நூல் எழுதியிருக்கிறார். பாரதத்தின் பண்டைய வரலாற்றை வெளிப்படுத்தும் அந்த நூலில் நாடு முழுவதும் விமரிசையாக தீபாவளி எல்லா வீடுகளிலும் வரிசை வரிசையாக அகல்விளக்கு ஏற்றி வைத்துக் கொண்டாடப்பட்ட செய்தி இடம்பெற்றிருக்கிறது. திருமலை திருப்பதி பெருமாள் கோயிலில் தமிழ் கல்வெட்டு ஒன்றில் திருப்பதி பெருமாளுக்கு, தீபாவளி பண்டிகையன்று அதிரசம் படைக்கப்பட்டதாக செய்தி இருக்கிறது. இன்றைக்கும் தீபாவளி பண்டிகை நாள்களில் பெருமாளுக்கு அதிரசம் நிவேதனம் செய்யப்படுகிறது. தென் பாரதத்தில் வீடுதோறும் தீபாவளிக்கு அதிரசம் செய்து இறைவனுக்குப் படைக்கும் வழக்கம் இருக்கிறது. புராதனப் பண்டிகை என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள். சங்க இலக்கியம் தொடங்கி தமிழ் இலக்கியங்களும் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் இருந்ததை அடுக்குகின்றன. 'அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்; மறுகுவிளக்கு உறுத்து, மாலை தூக்கிப், பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!' 'அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்' என்பது அமாவாசை நாளையே குறிக்கிறது. ஊர் முழுவதும் அமாவாசையாகிய இருள் நாளில் விளக்கேற்றி வரிசை வரிசையாக வைத்துக் கொண்டாடும் வழக்கம் இருந்ததை சங்க இலக்கியத்தின் அகநானூறு பேசுகிறது. தீபாவளி என்பது ஒளியின் திருவிழா. 'தீப மங்கள ஜோதி நமோ' தீபம் ஏற்றி வழிபடுவோம். இப்பண்டிகை நன்நாளில் அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்வுடன் கொண்டாடுவோம். அனைவர் வாழ்விலும் ஒளி துலங்கட்டும். நன்மை பெருகட்டும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை