பிக் பாஸ் நிகழ்ச்சியில் காமன்மேன் பிரிவில் பங்கேற்றுள்ள ஜேசன், உண்மையாகவே காமன்மேன்தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது குறித்து... பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் பிரிவில் இருந்து ஜேசன் கெளசிக் பங்கேற்றுள்ளார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் ஜேசன் நடித்துள்ளதாகவும், திரைப்படத்தில் நடித்த பிரபலம் எப்படி காமன்மேன் பிரதிநிதியாக முடியும்? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 9வது வாரத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சியின் 58 வது நாளான இன்று ரேங்கிங் டாஸ்க் நடைபெற்றது. இதில், ஒன்று முதல் 15 வரை வரிசையாக எண்கள் கொண்ட தூண்கள் வைக்கப்பட்டிருக்கும். தாங்கள் எந்த இடத்துக்கு பொருத்தமானவர் என்பதை போட்டியாளர்கள் கூற வேண்டும். இதில் முதல் இடத்துக்கு ஜேசன், டிடிஎஃப் வாசன், தன்யா, அடாவடி அன்சர், அவினாஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முதலிடத்துக்கு தன்யா தகுதியற்றவர் என சக போட்டியாளர்கள் கூறியதால், அவர் விலகினார். இதற்கு அடுத்து முதலிடத்துக்கி தகுதியான நபர் யார்? என்று ஜேசன் - வாசன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் தான் ஒரு காமன்மேன் பிரிவில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாகவும், டிடிஎஃப் வாசனைப்போன்று கைதட்டுவதற்கு வெளியே ஒரு கூட்டத்தை வைத்துவிட்டு வரவில்லை எனவும் கூறினார். இதற்கு பதில் அளித்த டிடிஎஃப் வாசன், எனக்கு முதல் வாரத்தில் எந்த அளவுக்கு கைதட்டல்கள் இருந்தது, 2வது வாரத்துக்கு எந்த அளவுக்கு கைதட்டல்கள் இருந்தது, 3வது வாரத்துக்கு எந்த அளவுக்கு கைதட்டல்கள் இருந்தது என்பதை இங்கு உள்ளவர்கள் அறிவார்கள். என் ஆட்டத்துக்குதான் கைதட்டல்கள் வருகின்றன எனக் கூறினார். டிடிஎஃப் வாசன் / ஜேசன் கெளசிக் இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் காமன்மேன் பிரிவில் பங்கேற்றுள்ள ஜேசன், உண்மையாகவே காமன்மேன் இல்லை என்றும், அவர் திரைப்பட நடிகர் எனவும் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு முன்பு, அவர் நடித்த படத்தின் காட்சிகளையும் பகிர்ந்து, திரைப்பட நடிகர் எப்படி காமன்மேன் பிரிவில் பங்கேற்க முடியும்? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் ஜேசன் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி ஏராளமான இணையத் தொடர்களிலும், குறும்படங்களிலும் ஜேசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜேசன் காமன்மேனா? நடிகரா?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗