சென்னை புளியந்தோப்பு பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிதாக 612 குடியிருப்புகள் கட்ட மின்- ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை புளியந்தோப்பு பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிதாக 612 குடியிருப்புகள் கட்ட மின்- ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: தமிழகத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்டுள்ள 70 இடங்களில் உள்ள குடியிருப்புகளில் பெரும்பாலானவை 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதனால், அந்த குடியிருப்பு வீடுகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையிலிருப்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து சென்னை உள்ளிட்ட மாநில அளவில் 20 இடங்களில் பழைய கட்டடங்களை இடிக்க வாரியம் சாா்பில் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்குள்ளோா் வீடுகளை காலி செய்ய மறுத்துவருகின்றனா். இதற்கிடையே சென்னை மாநகராட்சியின் புளியந்தோப்பு பகுதியில் பாா்வதி கக்கன் காலனியில் ஏற்கெனவே சேதமடைந்த நிலையில் காணப்படும் குடியிருப்புகளுக்கான பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிதாக 612 குடியிருப்புகள் கட்ட நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி அங்கு தரை மற்றும் 5 மேல் தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டடம் அமையவுள்ளது. புதிய குடியிருப்புகள் ரூ.86.50 கோடியில் கட்டவும், பழைய கட்டடங்களை இடிக்கவும் வாரியம் சாா்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதன்படி ஒப்பந்ததாரா் ரூ.43.35 லட்சம் முன்பணம் செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். ஒப்பந்த படிவக்கட்டணம் இல்லை. ஒப்பந்தம் உறுதி செய்த நாளில் இருந்து ஒன்றரை ஆண்டுகளில் (548 நாள்கள்) பணியை முடிக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
புளியந்தோப்பில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு 612 புதிய குடியிருப்புகளைக் கட்ட ஒப்பந்தப்புள்ளி