சண்முக பாண்டியனின் வாணவேடிக்கை டிரைலர் வெளியீடு குறித்து... சண்முக பாண்டியனின் வாணவேடிக்கை டிரைலர் வெளியீடு. - படம்: விடியோ கிளிப் சண்முக பாண்டியனின் வாணவேடிக்கை டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் திரு இயக்கும் வாணவேடிக்கை என்ற திரைப்படத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நாயகனாகவும் நாயகியாக நடிகை ஷிவானி ராஜசேகரும் நடித்துள்ளனர். வாணவேடிக்கை படத்தின் முக்கிய பாத்திரத்தில், வில்லனாக மோகன்ராஜா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஜெயபிரகாஷ், சரவணன், இந்துமதி, கிரண், சிவா, சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், ஷரா, சுபிக்ஷா, இயக்குநர் தமிழ், ஜான் மகேந்திரன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல். கே. சுதிஷ் தயாரித்துள்ளார். காதல், ஆக்ஷன் திரைப்படமான இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். தந்தை - மகன் இடையேயான பாசத்தை மையப்படுத்தி, உணர்வுபூர்வமான குடும்பப் படமாக எடுக்கப்பட்டுள்ள வாணவேடிக்கை படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சண்முக பாண்டியனின் வாணவேடிக்கை! டிரெய்லர் வெளியானது!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗