டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் பலி - பலரை மீட்கும் பணி தீவிரம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் பலி - பலரை மீட்கும் பணி தீவிரம்

புதுடெல்லி: பழைய டெல்லியில் கலி சத்தாரா பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பழைய டெல்லியில் உள்ள கலி சத்தாரா பகுதியில் இன்று (நவ.5) காலை மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்த தகவல் காலை 9.50 மணிக்குக் கிடைத்தது. தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே அப்பகுதி மக்கள் நான்கு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மீட்பு வாகனங்கள் உட்பட 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன” என தெரிவித்தார். கட்டிடம் இடிந்து விழுந்தபோது அங்கு சுமார் 15 கட்டுமானத் தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டல துணை காவல் ஆணையர் ரோஹித் ராஜ்பிர் சிங் கூறுகையில், “கட்டிடம் இடிந்து விழுந்தபோது அங்கு சுமார் 15 கட்டுமானத் தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். இதுவரை ஆறு முதல் ஏழு தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் காயமின்றி தப்பினர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மூவரில் இருவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர். மூன்றாவது நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதற்கட்ட விசாரணையின்படி, சுமார் ஒன்றரை மாதங்களாக அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. மூன்று அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்துள்ளது. பில்லர் அமைப்பு, கட்டிடத்தின் எடையைத் தாங்க முடியாமல் போனதே விபத்துக்குக் காரணம்” என தெரிவித்துள்ளார். கட்டிடம் இடிந்து விழுந்தபோது எந்த சத்தமும் கேட்கவில்லை என்றும், கட்டிடம் அப்படியே உள்வாங்கிச் சரிந்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை