தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு என்ன? - தமிழக அரசுக்கு பாஜக முன்வைக்கும் 5 யோசனைகள்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு என்ன? - தமிழக அரசுக்கு பாஜக முன்வைக்கும் 5 யோசனைகள்

சென்னை: தெருநாய் பிரச்சினைக்கு தீர்வாக மனித உயிர்களையும் விலங்கு நலனையும் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும் என பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன (என்ஜிஓ) பிரிவின் மாநில தலைவர் இரா.அர்ஜுனமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு 5 வழிகாட்டுதல்களையும் அவர் முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நகரங்களிலும் கிராமங்களிலும் தெருநாய்களின் பெருக்கம் இன்று முக்கியமான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பூங்காக்களில் விளையாடும் சிறுவர்கள், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் எனப் பலரும் தெருநாய்களின் துரத்தல் மற்றும் கடியால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். இது வெறும் அசவுகரியம் அல்ல; மனித உயிரைப் பறிக்கக்கூடிய ரேபிஸ் நோயுடன் தொடர்புடைய பிரச்சினை. மத்திய அரசின் நாடாளுமன்றத் தரவுகளின்படி, தமிழகத்தில் பதிவான நாய்க்கடி சம்பவங்கள் 2022-ல் 3.64 லட்சமாகவும், 2023-ல் 4.41 லட்சமாகவும், 2024-ல் 4.80 லட்சமாகவும் உயர்ந்துள்ளன. இந்த அதிகரிப்பு அரசு உடனடியாகத் தலையிட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. குழந்தைகள் கடுமையான காயங்களுக்கு ஆளாவது, முதியவர்கள் நாய்கள் துரத்தும்போது கீழே விழுந்து காயமடைவது, பூங்காக்களிலும் நடைபாதைகளிலும் குடும்பங்கள் அச்சத்துடன் நடமாடுவது போன்ற சூழல்கள் பொதுமக்களின் அன்றாடப் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்குகின்றன. ரேபிஸ் நோயின் அறிகுறிகள் தோன்றிய பிறகு உயிரிழப்பு அபாயம் மிக அதிகம் என்பதால், தடுப்பூசியும் உடனடி மருத்துவச் சிகிச்சையும் அவசியம். நாய்களைக் கொல்வதோ, கொடுமைப்படுத்துவதோ மனிதநேயமான வழியல்ல. அதேபோல், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைப் புறக்கணிப்பதும் நியாயமல்ல. மனித உயிரையும் விலங்கு நலனையும் ஒருங்கே பாதுகாக்கும் அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையே தேவை. நெதர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள் நாய்களின் கருத்தடை, தடுப்பூசி, உரிமையாளர் பதிவு, தத்தெடுப்பு மற்றும் பொறுப்பான வளர்ப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்துள்ளன. இந்தியாவிலேயே கோவாவின் ‘மிஷன் ரேபிஸ்’ முயற்சி பெருமளவிலான தடுப்பூசித் திட்டங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. இத்தகைய அனுபவங்களைத் தமிழகமும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு இப்பிரச்சினையை மாநில அளவிலான சிறப்புத் திட்டமாக அறிவித்து, தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். இதில் நகராட்சி நிர்வாகம், கால்நடை பராமரிப்பு, சுகாதாரம், உள்ளாட்சி அமைப்புகள், கால்நடை மருத்துவர்கள், விலங்கு நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும். மூன்றாண்டுகளுக்குள் அளவிடக்கூடிய முடிவுகளை எட்டுவதற்கான அதிகாரமும் காலக்கெடுவும் இக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும். முதலாவதாக, ஆறு மாதங்களுக்குள் மாநிலம் முழுவதும் தெருநாய்கள் கணக்கெடுப்பு நடத்தி, ஒவ்வொரு வார்டிலும் நாய்களின் எண்ணிக்கை, கருத்தடை நிலை, தடுப்பூசி விவரம் மற்றும் நாய்க்கடி அதிகம் நிகழும் பகுதிகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டும். இரண்டாவதாக, மாவட்டங்கள் தோறும் தேவைக்கேற்ப நிரந்தர விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மருத்துவ மையங்களை அமைத்து, கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசிப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். குறைந்தபட்சம் 70 சதவீத நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் இலக்கைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். மூன்றாவதாக, தமிழகத்தில் செயல்படும் பைரவ காப்பகங்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட விலங்கு காப்பகங்களை அரசு மருத்துவக் கட்டமைப்புடன் இணைக்க வேண்டும். அவற்றுக்கு கால்நடை மருத்துவர்கள், இலவச தடுப்பூசிகள், மருந்துகள், அறுவைச் சிகிச்சை மற்றும் அவசரச் சிகிச்சைக்கான நிதியுதவி வழங்கப்பட வேண்டும். சிஎஸ்ஆர் நிதியையும் தனியார் மருத்துவர்களின் பங்களிப்பையும் ஒருங்கிணைக்கலாம். நான்காவதாக, பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் நடைப்பயிற்சிப் பாதைகளில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆபத்தான நாய்களைச் சட்டப்படி அடையாளம் கண்டு, உரிய மருத்துவப் பரிசோதனை மற்றும் பாதுகாப்பான பராமரிப்புக்கு உட்படுத்த வேண்டும். உணவுக் கழிவுகளைத் திறந்தவெளியில் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். ஐந்தாவதாக, தெருநாய்களுக்கு உணவளிப்பதற்கும் முறையான வழிகாட்டுதல்களை அரசு உருவாக்க வேண்டும். விலங்குகளுக்கு உணவளிப்பது மனிதநேயச் செயல்தான். ஆனால் பள்ளிகள், மருத்துவமனைகள், குழந்தைகள் விளையாடும் இடங்கள், நடைபாதைகள் போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் கட்டுப்பாடற்ற உணவளிப்பதால் நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, ஒவ்வொரு வார்டிலும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஆலோசனையுடன் பாதுகாப்பான உணவளிப்பு இடங்களையும் நேரங்களையும் நிர்ணயிக்க வேண்டும். சத்தான உணவுகளை வழங்குதல், உணவளித்த பின்னர் இடத்தை சுத்தம் செய்தல் ஆகியவற்றுக்கும் வழிகாட்ட வேண்டும். உணவளிப்பவர்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் இடம்பெறும் வார்டு அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்களையும் அமைக்கலாம். ஆறாவதாக, செல்லப்பிராணிகளைக் கைவிடுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை, கட்டாயப் பதிவு, பொறுப்பான வளர்ப்பு மற்றும் தத்தெடுப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த வேண்டும். நாய்க்கடி சம்பவங்களில் கணிசமான குறைவு, மனித ரேபிஸ் உயிரிழப்புகளைப் பூஜ்ஜியத்தை நோக்கிக் கொண்டுசெல்லுதல், தேவையான கருத்தடை மற்றும் தடுப்பூசிப் பாதுகாப்பு, முறையான விலங்கு காப்பகங்கள், குழந்தைகளும் முதியவர்களும் அச்சமின்றி நடமாடக்கூடிய பொதுவெளிகள் - இவையே இத்திட்டத்தின் வெற்றிக்கான அளவுகோல்களாக இருக்க வேண்டும். ஒவ்வோரு ஆண்டும் முன்னேற்ற அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். இது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான விவாதமாக இருக்க வேண்டியதில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கையையும் உயிரையும் தொடும் அடிப்படைப் பிரச்சினை. தமிழக அரசு இதனை மக்கள் நலச் சிறப்புப் பணியாக முன்னெடுத்து, மூன்றாண்டுகளில் இந்தியாவுக்கே முன்னுதாரணமான மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை