பள்ளியில் மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து பலியான அதிர்ச்சி சம்பவம் பற்றி.. வகுப்பறையில் மயங்கி விழுந்து பலி திலலியில் உள்ள மயூரி விஹாரில் உள்ள லவ்லி பப்ளிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் 9 வயது மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான பள்ளியின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில், புதன்கிழமை வழக்கமாகப் பள்ளிக்கு வந்த மாணவி விளையாட்டுப் பயிற்சி முடிந்து வகுப்பறைக்குத் திரும்பியுள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். விழுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு மாணவி இடுப்பில் கைவைப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. உடனே, ஆசிரியர் மாணவியை நாற்காலியில் அமர வைக்க முயன்றார். ஆனால், மாணவி சுயநினைவு இன்றி இருந்ததால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மாணவி குறித்து பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், நிர்மான் விகாரில் உள்ள மாலிக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக ஏற்கெனவே மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பம் குறித்துப் பற்றி முதல்வர் பாவ்னா மாலிக் கூறுகையில், இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். சிறுமி வகுப்பறையில் மயங்கி விழுந்ததும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால், மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகத்தின் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதிகளவில் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் அவசர மருத்துவ வசதிகள் இல்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் தில்லி முழுவதும் உள்ள பள்ளிகளின் அவசர மருத்துவ முதலுதவிப் பயிற்சிகளின் அவசியத்தை மீண்டும் பெரியளவில் விவாதமாக்கியுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தில்லியில் 9 வயது மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து பலி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗