திரிஷா விஜய், விஜய் பாலு என்ற பெயர்களில் பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்ட போலி புத்தகங்களில் ஜூன் மாத முத்திரை இருப்பது குறித்து திமுக கேள்வ கோவையில் பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தபோது - DIPR திரிஷா விஜய், விஜய் பாலு, சுமேகா விஜய் உள்ளிட்ட பெயர்களில் அச்சிடப்பட்டு பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்ட போலி புத்தகங்களில் ஜூன் மாத முத்திரை இருப்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை திமுக எழுப்பியிருக்கிறது. திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, தவெக ஆட்சி அமைந்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யால் திறந்துவைக்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சில புத்தகங்கள் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு, மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது திமுக ஆட்சியில் நடந்த ஊழல் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதற்கிடையே தற்போது போலியான பதிப்பகத்தின் பெயர்களில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் ஜூன் மாத முத்திரைக் குத்தப்பட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. இது குறித்து திமுக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது. விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை..கொலைகள் குறித்து கவலையில்லை… காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்புகள் இல்லை… மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை... அவ்வளவு ஏன்? அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்து கூட பதிவு இல்லை. ஆனால் திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும் அவருக்குக் கிடைத்த பாராட்டும் பேசு பொருளானதும், புத்தக கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர். பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேதி கூட டம்மி சிஎம் பிறந்தநாள் தான். அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது? கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர். திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா? அல்லது எந்த விவரமும் தெரியாமல் தான் டம்மி சிஎம் அறிக்கை விட்டு இருக்கிறாரா? என்று திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
திரிஷா விஜய், விஜய் பாலு! பெரியார் அறிவுலகம் போலி புத்தகங்களில் ஜூன் மாத முத்திரை! திமுக எழுப்பும் கேள்விகள்
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗