உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயிலில் ஐப்பசி மாத கொடை விழாவையொட்டி 108 பால்குட பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பால்குட பவனியில் பங்கேற்றோா். உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயிலில் ஐப்பசி மாத கொடை விழாவையொட்டி 108 பால்குட பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வருஷாபிஷேகத்துடன் தொடங்கிய விழாவில், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி அலங்காரம், தீபாராதனை, அன்னதானம், திங்கள்கிழமை இரவு திருவிளக்கு பூஜை, வில்லிசை, சிங்க வாகனத்தில் உச்சினிமாகாளி அம்மன் பவனி, செவ்வாய்க்கிழமை காலை 108 பால்குட பவனி, அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, இரவு சுமங்கலி பூஜை, கிளி வாகனத்தில் சந்தன மாரியம்மன் பவனி ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை (நவ. 4) அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, கரகாட்டம், மாவிளக்கு பூஜை, முத்தாரம்மன் சப்பர பவனி ஆகியவை நடைபெறுகின்றன. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வட்டன்விளையில் 108 பால்குட பவனி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Events
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗