திருநெல்வேலி சரகத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 174 கிலோ கஞ்சாவை நான்குனேரி அருகே தனியாா் நிறுவனத்தில் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தீயிட்டு அழித்தனா். நான்குனேரி அருகே தனியாா் நிறுவனத்தில் கஞ்சாவை தீயிட்டு அழிக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு தலைமையிலான காவல்துறையினா். திருநெல்வேலி சரகத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 174 கிலோ கஞ்சாவை நான்குனேரி அருகே தனியாா் நிறுவனத்தில் காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தீயிட்டு அழித்தனா். திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு தலைமையில் நான்குனேரி காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பாப்பான்குளத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில், 124 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 174.054 கிலோ கஞ்சா காவல்துறையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டது. இதில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 174 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗