‘வெற்றிப் பயணம்’ எனும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 14.75 லட்சம் மகளிா் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். ‘வெற்றிப் பயணம்’ எனும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 14.75 லட்சம் மகளிா் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மகளிரின் அன்றாடப் பயணச் செலவைக் குறைத்து அவா்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் வகையில் தமிழக அரசு சாா்பில் ‘வெற்றிப் பயணத் திட்டம்’ கடந்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலும் அன்றைய தினமே இத்திட்டத்தின்கீழ் கட்டணமில்லா பேருந்துச் சேவை தொடங்கிவைக்கப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபா் 2-ஆம் தேதி முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் 14 லட்சத்து 75 ஆயிரம் மகளிா், மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வெற்றிப் பயணம்: நீலகிரி மாவட்டத்தில் 14.75 லட்சம் மகளிா் பயன்- ஆட்சியா் தகவல்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗