Bank strike 2026 கடைசி ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போது 5 நாள் வேலை வாரம் குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. அது பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையாகவும் இருக்கவில்லை. தொழிற்சங்கங்கள் உண்மைகளைத் திரித்துக் கூறுகின்றன வங்கிகளுக்கு 5 நாள் வேலை வாரத்திற்கு அரசு ஒப்புதல் அளிக்கவில்லை: உண்மைகள் திரிக்கப்படுகின்றன - அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தகவல் Siddharth Upasani வங்கிகளுக்கு 5 நாள் வேலை வாரம் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு எப்போதுமே ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், இது தொடர்பான உண்மைகள் வேண்டுமென்றே திரிக்கப்பட்டு வருவதாகவும் நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 28 முதல் 30 வரை ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் மன்றம் (UFBU) மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 5 நாள் வேலை வாரம் என்ற முக்கியக் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வாசிக்க இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அமைச்சக அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறுகையில், "கடைசி ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போது 5 நாள் வேலை வாரம் குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. அது பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையாகவும் இருக்கவில்லை. தொழிற்சங்கங்கள் உண்மைகளைத் திரித்துக் கூறுகின்றன" என்றார். மறுபுறம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC) செப்டம்பர் 22 அன்று எழுதிய கடிதத்தில், மார்ச் 2024 இல் நடைபெற்ற கடைசி ஊதிய மாற்றத்தின் போது ஒப்புக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்ட இந்தக் கோரிக்கைக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், அனைத்துச் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை விடுமுறை நாளாக அறிவிக்க இந்திய வங்கிகள் சங்கம் (IBA) அரசுக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும், அது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் இந்திய வங்கிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்ததாகக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நடைமுறை தற்போதைய நிலவரப்படி, மாதத்தின் முதல், மூன்றாவது மற்றும் ஐந்தாவது சனிக்கிழமைகளில் வங்கி கிளைகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. மார்ச் 2024 இல் கையெழுத்தான 12 வது இருபக்க ஒப்பந்தத்தின்படி, அனைத்து சனிக்கிழமைகளையும் வங்கி விடுமுறை நாளாக அறிவிக்க இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே புரிதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த மாற்றங்களைச் செயல்படுத்த இந்திய அரசின் ஒப்புதலும், ரிசர்வ் வங்கியின் (RBI) அனுமதியும் தேவை என்று அந்த ஒப்பந்தம் குறிப்பிட்டிருந்தது. அரசின் பிற சலுகைகள் மற்றும் விளக்கம் மற்ற பல சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும், 5 நாள் வேலை வாரத்திற்கு அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று நிதி அமைச்சக அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்திய வங்கிகள் சங்கம் (IBA) 11 சதவீத ஊதிய உயர்வை மட்டுமே வழங்க விரும்பிய நிலையில், அரசின் தலையீட்டின் பேரில் 17 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. குடும்ப ஓய்வூதிய விவகாரத்திலும் ஐ.பி.ஏ. தயக்கம் காட்டியது, ஆனால் ஓய்வுக்குப் பின் வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருந்தது. பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கான திட்டம் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டதால் செயல்திறன் அடிப்படையிலான ஊக்குவிப்பு (PLI) நடப்பு நிதியாண்டிற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இத்திட்டம் 'பாகுபாடானது' என்று தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. வார இறுதி வங்கிச் செயல்பாடுகள் திங்கட்கிழமை தொடங்கும் மூன்று நாள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படக்கூடாது என்பதற்காக செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுத்துறை மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் வழக்கம்போல் இயங்கும் என்று நிதி அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது. செப்டம்பர் 26 நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். எனவே, ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கவில்லை என்றால் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றி வங்கிச் சேவைகளைப் பெறும் வகையில், அனைத்து வங்கி கிளைகள், அலுவலகங்கள் மற்றும் ஏடிஎம் மையங்கள் ஞாயிற்றுக்கிழமை முழுமையாகச் செயல்பட ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது என்று நிதி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
5 நாள் வேலை வாரம்: வங்கிச் சங்கங்கள் கூறுவது பொய்: நிதி அமைச்சக வட்டாரங்கள் மறுப்பு
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk