சென்னை கீழ்பாக்கம் மனநல நிறுவன வேலை வாய்ப்பு; 5 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? என்ற முழு விபரம் இங்கே சென்னை கீழ்பாக்கத்தில் இயங்கி வரும் மனநல நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.09.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Senior Consultant in Psychiatry காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: உளவியல் நிறுவனத்தில் 3 ஆண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். வயதுத் தகுதி: 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 1,25,000 Consultant in Psychiatry காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: A post graduate Psychiatry படிப்பு படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 1,00,000 Clinical Psychologist Or Psychiatric Social Worker காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: M.A./ M.Sc.degree in Psychology and M.Phil in Clinical Psychology படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 50,000 Project Co-Ordinator காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B.E., or Diploma in Engineering படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 35,000 Data Entry Operator காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Diploma in Computer Application படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 25,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N26094727.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி: directorimh2013@gmail.com விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
கீழ்பாக்கம் மனநல நிறுவன வேலை வாய்ப்பு; 5 பணியிடங்கள்; டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிங்க
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk