நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “நேற்று (23-09-26) மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அன்று இரவு 23.00 மணிக்கும் அதிகாலை 01.00 மணிக்கும் இடையே கலிங்கப்பட்டினத்திற்கு மிக அருகில் கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 25-09-2026 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 26-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 27-09-2026 முதல் 30-09-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்: 24-09-2026 மற்றும் 25-09-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. 26-09-2026 முதல் 28-09-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 24-09-2026 மற்றும் 25-09-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். 26-09-2026 முதல் 28-09-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று (24-09-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (25-09-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை:தமிழக கடலோரப்பகுதிகள்: 24-09-2026: வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர்வேகத்திலும், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர்வேகத்திலும்வீசக்கூடும். 25-09-2026: வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர்வேகத்திலும் வீசக்கூடும். 26-09-2026 முதல் 28-09-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. வங்கக்கடல்பகுதிகள்: 24-09-2026: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில் இன்று மதியம் வரை சூறாவளிக் காற்று மணிக்கு 55-65 கி.மீ வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ வேகத்திலும் மாலை முதல் சூறாவளிக் காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகமாக குறைய வாய்ப்புள்ளது.இன்று நள்ளிரவு முதல் நாளை (செப்டம்பர் 25) காலை வரை காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகமாக குறைந்து, அதன் பிறகு படிப்படியாக மேலும் குறையும்.வடக்கு ஆந்திரா கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய கிழக்கு தெலுங்கானா, தெற்கு ஒடிசா மற்றும் தெற்கு சத்தீஸ்கர் பகுதிகளில் இன்று மதியம் வரை சூறாவளிக் காற்று மணிக்கு 55-65 கி.மீ வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ வேகத்திலும், மாலை முதல் சூறாவளிக் காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் இன்று நள்ளிரவு முதல் நாளை (செப்டம்பர் 25) காலை வரை காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகமாக குறைந்து, அதன்பின் படிப்படியாக மேலும் குறையும். வடமேற்கு ஒடிசா, வடக்கு சத்தீஸ்கர் மற்றும் தென்மேற்கு ஜார்கண்ட் மாவட்டங்கள்: செப்டம்பர் 24 மாலை முதல் செப்டம்பர் 25 மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு வேகம் படிப்படியாகக் குறையும். வடக்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்: இன்று மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மேற்கு வங்கம் மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் கடலோரப் பகுதிகள்: மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 25-09-2026: தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 26-09-2026 முதல் 28-09-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. அரபிக்கடல் பகுதிகள்: 24-09-2026 மற்றும் 25-09-2026: கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 26-09-2026 முதல் 28-09-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மின்வெட்டு : சிக்கலை தீர்க்காமல் அலட்சியமாக இருப்பதா? – அன்புமணி கேள்வி? அடுத்தடுத்து இரண்டு அரசுப் பள்ளிகளில் நஞ்சான காலை உணவு – நயினார் நாகேந்திரன் கண்டனம்! சென்னையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் – மாநகராட்சி ஆணையாளர்! ‘ஜெம்’ வீரமணி வழக்கு – விசாரணையை விரைவுப்படுத்த வைகோ வலியுறுத்தல்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை