அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளிக்குள் மர்மநபர்கள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் ஊடகப் பேட்டிகள் கொடுத்துள்ள நிலையில், இதனை விசாரிக்க வேண்டிய காவல்துறையோ, செய்தி வெளியிட்ட ஊடகங்களை “Delete” செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது. சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளிக்குள் மர்மநபர்கள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் ஊடகப் பேட்டிகள் கொடுத்துள்ள நிலையில், இதனை விசாரிக்க வேண்டிய காவல்துறையோ, செய்தி வெளியிட்ட ஊடகங்களை “Delete” செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது. முதமைச்சர் விஜய் அவர்களே- உங்கள் ஆட்சியில் காவல்துறை செயல்படும் லட்சணம் இது தானா? அரசுப்பள்ளி பாதுகாப்பற்ற இடமாக மாறி, ஒரு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பதை உங்கள் காவல்துறை விசாரிப்பதை விட்டுவிட்டு, செய்தி வந்த மறுகணமே “False News” என்று முந்திக்கொண்டு வந்து நிற்பது வெட்கக்கேடான செயல். தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் ஆட்சியில் காவல்துறையும் ரூட் மாபியா பாணியை கடைபிடிக்க உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? High Profile Cases என்றால் ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா? Costly முதலமைச்சர் என்று நான் இவரை சொன்னது இந்த மனோபாவத்தின் காரணமாக தான்! தற்போது இந்த அரசின் செயல்கள் அதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் பெண்களின், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், பாலியல் புகார்களை முறையாக விசாரிக்காமல் செய்தியே வரக்கூடாது என்று ஊடகங்களை மிரட்டும் இந்த புதிய பாயாச-பாசிச அரசுக்கு எனது கடும் கண்டனம். வண்டலூர் அரசுப்பள்ளி மாணவி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “காவிரியில் தமிழகத்திற்கான உரிய பங்கை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்!” – மாணிக்கம் தாகூர் ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்! “சிங்கப்பெண் படை எங்கே? அரணா இருப்பேன் என்ற முதல்வர் எங்கே?” – உதயநிதி ஸ்டாலின் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தது தமிழக அரசு! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“High Profile Cases என்றால் ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா?” – எடப்பாடி பழனிசாமி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk