ஒரே டிரிப்பில் ரூ. 2.88 லட்சம் வருமானம்; சுற்றிக்கொண்டே சம்பாதிக்கலாம்; பயண ஆர்வத்தை தொழிலாக மாற்றிய இளம்பெண்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Business ✍️
ஒரே டிரிப்பில் ரூ. 2.88 லட்சம் வருமானம்; சுற்றிக்கொண்டே சம்பாதிக்கலாம்; பயண ஆர்வத்தை தொழிலாக மாற்றிய இளம்பெண்

இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் முதல் குழுப் பயணங்களை வழிநடத்துவது வரை, குறைந்த ஊதியப் பணிகளைச் செய்து வந்த ரியானான் வுட் தற்போது பயணத்துறையில் தனது வெற்றிகரமான வாழ்க்கையைக் கட்டியெழுப்பியுள்ளார். ரியானான் வுட் பெரும்பாலும் குறைந்த லக்கேஜ்களுடனேயே பயணம் செய்கிறார்; குறைந்த கட்டணத் தங்குமிடங்களில் தங்குகிறார். கடந்த ஒரு ஆண்டாக ஒரு 'தோள் பை'யுடன் மட்டுமே தனது பெரும்பாலான வாழ்க்கையைக் கழித்துள்ளார். அத்துடன், சொந்தமாகப் பயணத் தொழிலை நடத்துவது வழக்கமான பணி-வாழ்க்கைச் சமநிலைக்கு வழிவகுப்பதில்லை. ரியானான் வுட்டிற்குப் பயணம் என்பது எப்போதுமே ஒரு சாதாரண பொழுதுபோக்காக இருந்ததில்லை. 26 வயதான இவர், புதிய இடங்களைச் சுற்றிப்பார்ப்பதில் தமக்கு இருந்த காதலைத் தற்போது ஒரு முழுநேரத் தொழிலாக மாற்றியுள்ளார். பிராண்ட் உடன்பாடுகள், ஸ்பான்சர் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவுகள் மற்றும் குழுப் பயணங்களை வழிநடத்துவதன் மூலம் கிடைக்கும் கமிஷன் ஆகியவை இவரது முதன்மை வருமானமாக உள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: இன்ஸ்டாகிராமில் சுமார் 60,000 ஃபாலோவர்களைக் கொண்டுள்ள இவர், தற்போது சொந்தமாக ஒரு பயண நிறுவனத்தைத் தொடங்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போதே பயணங்கள் மீதான தனது ஆர்வம் தொடங்கியது என்று 'பிசினஸ் இன்சைடர்' இதழிடம் ரியானான் வுட் தெரிவித்தார். 2021-22-ம் ஆண்டில் பிரான்சின் லியோன் நகரில் நடைபெற்ற கல்விப் பரிமாற்றத் திட்டத்தின் போது, வார இறுதிகளில் அருகில் உள்ள நாடுகளுக்கும் ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளுக்கும் இவர் பயணம் செய்யத் தொடங்கினார். இந்த அனுபவமே, பட்டப்படிப்பிற்குப் பிறகும் பயணம் என்பது தனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருக்கும் என்பதை அவருக்கு உணர்த்தியது. பின்னர் கனடாவிற்கு இடம்பெயர்ந்த அவர், தனது வாழ்க்கைச் செலவுகளுக்காகக் குறைந்த ஊதியம் தரும் பல வேலைகளைச் செய்ததாகக் கூறினார். படகு மற்றும் கெனோ வாடகை நிறுவனம், ஜிப்லைன் நிறுவனம் மற்றும் பனிச்சறுக்கு மையங்களில் ரியானான் வுட் பணியாற்றினார். அதே நேரத்தில், தனது பயணங்களை இணையத்திலும் ஆவணப்படுத்தி வந்தார். ஒரு பயணத்திலிருந்து தொடர்ந்த அடுத்தடுத்த வாய்ப்புகள் 2024-ம் ஆண்டின் இறுதியில், இன்ஸ்டாகிராம் தளத்தை தீவிரமாக அணுகி, தனது பதிவுகள் மூலம் வருமானம் ஈட்ட முடியுமா என்று பார்க்க முடிவு செய்ததாக வுட் கூறினார். இதற்காகச் சமூக ஊடக உத்திகள் குறித்த படிப்புகளில் சேர்ந்து, பார்வையாளர்களை ஈர்ப்பது எப்படி மற்றும் பிராண்டுகளுடன் இணைந்து பணியாற்றுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பயிற்சியாளரையும் நியமித்தார். அவரது முயற்சிக்கு உடனடியாகப் பலன் கிடைத்தது. நான்கு மாதங்களுக்குள், 'மாபோ டாபோ' (Mapo Tapo) என்ற ஆன்லைன் குழுப் பயண நிறுவனம், சுவிட்சர்லாந்திற்கு ஒரு குழுப் பயணத்தை வழிநடத்துமாறு அவரை அணுகியது. அதற்கு முன் இதுபோன்ற சுற்றுப்பயணங்களை ஒருபோதும் வழிநடத்திய அனுபவம் இல்லாவிட்டாலும், அந்தப் பணியின் மூலம் வுட்டிற்கு 330 பவுண்டுகள் வருமானமாகக் கிடைத்தது. மலை ஏறுதல் மற்றும் பாறை ஏறுதலில் அவருக்கு இருந்த அனுபவம், வெளிப்புற நடவடிக்கைகளை உள்ளடக்கிய பயணங்களைத் திட்டமிடும்போது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சுவிட்சர்லாந்து பயணம், பயணங்கள் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த பிராண்டுகளுடன் மேலும் பல வேலை வாய்ப்புகளைப் பெற உதவியதாக அவர் தெரிவித்தார். அதன் பிறகு 'ஸ்கைஸ்கேனர்', 'சிரோகோ' மற்றும் 'ரோம்லெஸ்' போன்ற முன்னணி நிறுவனங்களுடன் ரியானான் வுட் இணைந்து பணியாற்றியுள்ளார். குழுப் பயணங்களை வழிநடத்துவதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் வருமானம், பயணிகளின் எண்ணிக்கை மற்றும் அவர் பணியாற்றும் நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும். ஒரே பயணத்தில் கமிஷனாக மட்டும் அவர் அதிகபட்சமாக 3,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 2.88 லட்சம்) வரை சம்பாதித்துள்ளார். அதேபோல், தொடக்கத்தில் சில நூறு டாலர்களாக இருந்த அவரது இன்ஸ்டாகிராம் விளம்பரக் கட்டணமும் தற்போது 1,000 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ‘விடுமுறை நாட்களே அரிது’ தற்போது தனது வருமானம் ஐந்திலக்க டாலர் அளவை எட்டியுள்ளதாக வுட் கூறினார். சுற்றுலாக்கள் மூலம் கிடைக்கும் பணத்தில் பெரும்பகுதியைச் சேமித்து வைக்கும் அவர், ஸ்பான்சர்ஷிப் மூலம் வரும் வருமானத்தை தினசரி சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்துகிறார். இருப்பினும், இந்த வேலை பல சவால்களையும் தியாகங்களையும் உள்ளடக்கியது. ரியானான் வுட் பெரும்பாலும் குறைந்த லக்கேஜ்களுடனேயே பயணம் செய்கிறார்; குறைந்த கட்டணத் தங்குமிடங்களில் தங்குகிறார். கடந்த ஒரு ஆண்டாக ஒரு 'தோள் பையுடன்' பையுடன் மட்டுமே தனது பெரும்பாலான வாழ்க்கையைக் கழித்துள்ளார். அத்துடன், சொந்தமாகப் பயணத் தொழிலை நடத்துவது வழக்கமான பணி-வாழ்க்கைச் சமநிலைக்கு வழிவகுப்பதில்லை. "எனக்கு விடுமுறை நாட்கள் என்பது அரிதான ஒன்று" பதிவுகளை உருவாக்குவது, பதிவிடுவது முதல் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பது, வர்த்தக ஒப்பந்தங்கள் பேசுவது மற்றும் குழுப் பயணங்களை ஏற்பாடு செய்வது என பெரும்பாலான நேரங்கள் திரை மறைவு வேலைகளுக்கே செலவாகின்றன என்று அவர் கூறினார். குறிப்பாகத் தொடக்கத்தில், பிராண்டுகளிடம் எவ்வளவு கட்டணம் கேட்பது என்று தெரியாமல் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களைப் பேசுவது மிகவும் சவாலாக இருந்ததை அவர் நினைவுகூர்ந்தார். தற்போது, ரியானான் வுட் தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார்: சொந்தமாக ஒரு பயண நிறுவனத்தைத் தொடங்குவது. புதிய இடங்களை ஆராய்வது என்ற தனது ஆரம்பகால ஆர்வத்தைச் சுற்றியே ஒரு தொழிலைக் கட்டியெழுப்புவதும், தன்னைத் தொடர்ந்து வரும் மக்களுடன் இணைந்து பயணம் செய்வதுமே தனது இலக்கு என்று அவர் கூறுகிறார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை