நியூயார்க்கில் நடைபெற்ற 81-வது ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க ஆதரவு தெரிவித்தார். அதேவேளையில், ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு கூடுதல் இடங்களை வழங்குவதற்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார். Photograph: (PMO via PTI Photo) ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (யு.என்.எஸ்.சி) நிரந்தர இடம் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ரஷ்யா தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது. நியூயார்க்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஐ.நா பொது சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பாதுகாப்பு கவுன்சிலில் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என மாஸ்கோ விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளின் நிரந்தர உறுப்பினர் கோரிக்கையையும் ரஷ்யா ஆதரிப்பதை அவர் உறுதி செய்தார். ஆங்கிலத்தில் படிக்க: தெற்கு உலக நாடுகளுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் கூடுதல் இடங்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய லாவ்ரோவ், குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசிலுக்கான ரஷ்யாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில், பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளுக்கு கூடுதல் இடங்களை வழங்கக் கூடாது என்பதை லாவ்ரோவ் தெளிவுபடுத்தினார். குறிப்பாக, ராணுவமயமாக்கலை நோக்கிச் செல்வதாகவும் பழைய பேரரசு ஆசைகளுக்குத் திரும்புவதாகவும் குற்றம்சாட்டி, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை அவர் சுட்டிக்காட்டினார். BIG AT UNGARussian Foreign Minister Sergey Lavrov backs India’s bid for a permanent seat on the UN Security Council. pic.twitter.com/Qb3h4KgSvO “ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தை விரிவாக்குவதை நாங்கள் ஆதரிக்கிறோம். நிரந்தர இடத்திற்கான பிரேசில் மற்றும் இந்தியாவின் வேட்புமனுக்களை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று லாவ்ரோவ் கூறினார். மேலும், பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் எந்த வடிவத்தை எடுத்தாலும், அது தற்போதுள்ள நிரந்தர உறுப்பினர்களின் அதிகாரத்தைக் குறைப்பதாக அமையக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், இந்த அமர்வில் உரையாற்றிய மொரிஷியஸ் நாடு, புதுடெல்லியின் வேட்புமனுவுக்கு ஆதரவு தெரிவித்தது. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்து ஜி4 மற்றும் எல்69 கூட்டமைப்புகள் எடுத்துள்ள நிலப்பாட்டைத் தனது நாடு ஆதரிப்பதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தனஞ்சய் ராம்பூல் தெரிவித்தார். “பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்த ஜி4 மற்றும் எல்69 அமைப்புகளின் நிலப்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். மேலும், உலகளாவிய விவகாரங்களில் இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பிற்கு ஏற்ப, நிரந்தர இடத்திற்கான இந்தியாவின் கோரிக்கைக்கான எங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என்று ராம்பூல் கூறினார். பாதுகாப்பு கவுன்சிலின் கட்டமைப்பு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தற்போது 15 இடங்களைக் கொண்டுள்ளது. அதில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 'வீட்டோ' அதிகாரம் கொண்ட 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மீதமுள்ள பத்து இடங்கள் இரண்டு ஆண்டு காலத்திற்கு சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நாடுகளால் நிரப்பப்படுகின்றன. பாதுகாப்பு கவுன்சிலில் புதிய நிரந்தர இடங்களைச் சேர்ப்பதற்கு ஐ.நா சாசனத்தையே திருத்த வேண்டும். இதற்குப் பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளும், தற்போதைய அனைத்து நிரந்தர உறுப்பினர்களின் ஒப்புதல் உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதலும் தேவை. ரஷ்யாவின் ஆதரவு இருந்தபோதிலும், பாதுகாப்பு கவுன்சிலைச் சீரமைக்கும் முயற்சி இதுவரை மிகக் குறைந்த முன்னேற்றத்தையே கண்டுள்ளது. மற்ற நிரந்தர உறுப்பினர்களிடையே இது குறித்த கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அதிலும் குறிப்பாக, ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்றான சீனா, இந்தியாவின் சேர்க்கையைத் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம்: ரஷ்யா பகிரங்க ஆதரவு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk