மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கோவையில் உள்ள இவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். அப்போது கலைஞர் கருணாநிதி தமக்கு எழுதிய பழைய கடிதங்களை விடுதலை விரும்பி அவர்களிடம் காட்டி மகிழ்ந்துள்ளார். தி.மு.கவின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள விடுதலை விரும்பி, அக்கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவராகவும் சிறந்த பேச்சாளராகவும் அறியப்படுகிறார். நாடு முழுவதும் தி.மு.க.வின் குரலாக பல மேடைகளில் தனது பேச்சின் மூலம் அறியப்பட்ட விடுதலை விரும்பி, கடந்த 1989 தொடங்கி 2004-ம் ஆண்டு வரை மாநிலங்களை எம்.பியாக பதவியில் இருந்தார். தற்போது 85 வயதாககும் அவர் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பாக, முன்னாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கோவையில் உள்ள இவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். அப்போது கலைஞர் கருணாநிதி தமக்கு எழுதிய பழைய கடிதங்களை விடுதலை விரும்பி அவர்களிடம் காட்டி மகிழ்ந்துள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், விடுதலை விரும்பி குறித்து எழிற்கோ பொன்மாறன் சண்மகசுந்ததரம் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில், மலைத்துப் போனேன்… வயது எண்பத்தி ஐந்தினைத் தாண்டினாலும் பிசிறற்ற பேச்சு… ஆங்காங்கே இழையோடும் சின்னச் சின்ன எள்ளல்கள்… மகத்தான நினைவாற்றல்…. இவைதான் விடுதலை விரும்பி அவர்களின் தனித்துவம். இரண்டுமுறை நாடாளுமன்ற எம்.பி. ஆக இருந்து மொத்த பாராளுமன்றத்தையே உற்று நோக்க வைத்த திறனுக்குச் சொந்தக்காரர்.பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்றத் தலைவராக நான் இருந்தபோது அவரை தொடக்க விழாவிற்கு உரையாற்ற அழைத்துச் சென்றதனைச் சொன்னேன். அவ்வளவுதான்…. தனது நினைவின் கூடுகளில் அடுக்கி வைத்திருந்த ஒவ்வொரு நிகழ்வினையும் ஒவ்வொன்றாக எம் முன்னே எடுத்து வைத்தபோது அதிர்ந்து போனேன். அதில் நான் பலவற்றை மறந்தே போயிருந்தேன். அவர் எமது கல்லூரிக்கு வந்தபோது முதல்வர் அறையில் தேநீர் அருந்தியது தொடங்கி நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே முதல்வர் எஸ்கேப் ஆனது வரைக்கும் அத்தனையையும் எடுத்துச் சொன்னபோது ஆச்சர்யத்தால் நான் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தேன். கல்லூரி உரிமையாளர்களில் ஒருவராக இருந்த வரதராஜ் அவர்கள் அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி. வந்திருப்பவரோ தி.மு.க.வின் ஆற்றல்மிகு பேச்சாளர். அந்த மேடையில் எப்படி இருப்பார் கல்லூரி முதல்வர் ? அதைவிடவும் இதற்கு ஒருமாதம் முன்புதான் அப்போதைய கல்வி அமைச்சர் அரங்கநாயகம் அவர்கள் மாணவர்களின் பல்ஸ் தெரியாமல் ஏதேதோ பேசப்போக ஏக ரகளை ஆடிட்டோரியத்தில். ஜப்பானைப் பார்… சீனாவைப் பார்…. என்று அவர் முழங்க… ”மண்டைக்காட்டப் பாருங்க மொதல்ல…” என்று மாணவர் தரப்பிலிருந்து குரல். (மண்டைக்காட்டில் மதக்கலவரம் உச்சத்தில் இருந்த நேரம் அது.) என்ன பேசியும் எதுவும் எடுபடாததால் வெளியேறினார் அமைச்சர் அரங்கநாயகம். மாணவர் தலைவராக இருந்த நானே அவற்றையெல்லாம் மறந்திருக்க எவற்றையும் மறக்காமல் உற்சாகத்தோடு நினைவு கூர்ந்தார் விடுதலை விரும்பி. அப்போதெல்லாம் நான் “பாமரன்” கிடையாது. எழிற்கோ…தான். அவரது தங்குதடையற்ற பேச்சு அடுத்து இலக்கியத்தின் பக்கம் தாவியது. வள்ளலாரை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிராக சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் செய்குத்தம்பி பாவலர் நடத்திய சொற்போர்… மொபைல் போன் வராத காலகட்டத்தில் மதுரையில் நடந்த மாபெரும் வழக்காடு மன்றம்… கம்யூனிச ஆட்சி முறையா? ஜனநாயக ஆட்சி முறையா ? என்கிற தலைப்பில். அதில் தா. பாண்டியனும் இவரும் எடுத்து வைத்த வாதங்கள்… "காலில்லா கட்டில்" என்று கவிஞர் சுரதா எதைச் சொல்கிறார்…? காஞ்சீபுரத்தின் சமணர்கள்… என நகர்ந்து கொண்டிருந்தது நேரம். எம்மை அழைத்துச் சென்ற தோழர் உமாபதிக்கோ சென்னை ரயிலைப் பிடித்தாக வேண்டும். என்ன செய்ய…? (அன்புமிக்க தோழர் உமாபதி குறித்து பின்னர் விரிவாக….) எங்களுக்கும் அவரிடமிருந்து விடைபெற மனமில்லை. அவருக்கும் எங்களை விட விருப்பமில்லை…. அவரிடம் அறிந்து கொள்ள இலக்கியம் அரசியல் ஆன்மீகம் என அநேகம் இருக்கிறது. அன்பிற்குரிய தோழர்கள் ஆ. இரா. வேங்கடாசலபதியும் கார்த்திக் ராம் மனோகரனும் தொகுத்து லண்டன் மாநகரில் வெளியிடப்பட்ட “கேம்பிரிட்ஜ் கம்பானியன் டு பெரியார்” (THE CAMBRIDGE COMPANION TO PERIYAR) என்கிற நூலினை அளித்துவிட்டு விடைபெற எத்தனித்த வேளையில்…. திரு. விடுதலை விரும்பி அவர்கள் தந்தை பெரியார் குறித்தும் அவரது அறிவின் வீச்சு குறித்தும் அது எவ்வாறெல்லாம் நம் மக்களை மேம்படுத்தியது என்பது குறித்தும் நெஞ்சம் நெகிழக் கூறியது இன்னமும் நிழாலாடிக் கொண்டிருக்கிறது மனதில். அவரிடம் கதைக்க இன்னமும் கனக்க இருக்கிறது. மீண்டும் வெகு விரைவில் சந்திப்போம் என்று அவரது நினைவாற்றலை புகழ்ந்து பதிவை வெளியிட்டுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தி.மு.க பேச்சாளராக நாடு முழுக்க சுற்றியவர்; 85 வயது விடுதலை விரும்பி இப்போது எப்படி இருக்கிறார்?
📅
📍 Madurai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk