“எனக்கே பொறாமை!” - கார்த்திக் சுப்புராஜை புகழ்ந்து தள்ளிய மணிரத்னம்!!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️
“எனக்கே பொறாமை!” - கார்த்திக் சுப்புராஜை புகழ்ந்து தள்ளிய மணிரத்னம்!!

செய்தியாளர் - M. மீரா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படத்திற்கு இயக்குநர் மணிரத்னம் பாராட்டுகளை குவித்துள்ளார். படத்தின் காட்சியமைப்பு, திரைமொழி மற்றும் தொழில்நுட்பத் திறனைப் புகழ்ந்த அவர், இந்தப் படத்தைப் பார்த்து எனக்கே பொறாமையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். படக்குழு வெளியிட்ட வீடியோவில் பேசிய மணிரத்னம், கார்த்திக் மிகவும் சிறப்பான திறமை வாய்ந்த இயக்குநர். இன்றைய இளம் இயக்குநர்களில் அவர் முன்னணியில் இருக்கிறார். டோரதி ஒரு மிகச் சிறப்பான திரைப்படம் என்றார். #Maniratnam about #Dorothy :"Karthik is a very, very special talent and a big advantage for Tamil cinema. We have so many promising young directors, and Karthik is the leader of that pack. Dorothy is a very special film. His film language is very, very good and very impressive.… மேலும், படத்தின் திரைமொழி அற்புதமாக இருக்கிறது. ஷாட்கள், காட்சிகளின் கட்டுப்பாடு, தொழில்நுட்பம் எல்லாமே மிகவும் ஈர்க்கும் வகையில் உள்ளது. இளையராஜாவின் இசை இந்தப் படத்திற்கு தனித்துவமான உயிர் கொடுத்துள்ளது. கார்த்திக்கிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் அவர் கூறினார். 1990-களை பின்னணியாகக் கொண்ட டோரதி (Dorothy), இரண்டு ஆண்களின் வாழ்க்கையில் ஒரு பெண் வருவதால் உருவாகும் உறவுகளையும், LGBTQIA+ கருப்பொருளையும் மையமாகக் கொண்டுள்ளது. வழக்கமான காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்த்த சில ரசிகர்களுக்கு படம் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், பலரும் அதன் வித்தியாசமான அணுகுமுறையை பாராட்டியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார். சர்வதேச திரைப்பட விழாவான டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா (TIFF)-வில் உலகத் திரையிடலை கண்ட டோரதி, அங்கு பார்வையாளர்களின் நின்று கைதட்டும் வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை