பொதுத்துறையின் கீழ் வரும் சட்டம்-ஒழுங்கு பிரிவு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வராது என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதனால், கலவரங்கள், அரசியல் போராட்டங்கள், காவல் மரணங்கள், சாதிய மோதல்கள் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு தொடர்பான தகவல்களை RTI மூலம் பெறுவதில் சிக்கல்சிக்கல் ஏற்படும் என்றும், போராட்டங்கள் மற்றும் சாதிய மோதல்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்த கோரிக்கைகள் தொடர்பான தகவல்களை பெருவதிலும் சிக்கல் ஏற்படும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI), 2005-இன் பிரிவு 24-இன் உட்பிரிவு (4)-இன் கீழ் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறைக்கு அளிக்கப்பட்டிருந்த விலக்கு தொடர்பான, மனிதவள மேலாண்மை (R) துறையின் 21.09.2026 நாளிட்ட அரசாணை (நிலை) எண் 57 ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. “வெளிப்படையான அரசு என்ற தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது!” – கனிமொழி “உதயநிதி நிதானம் இல்லாமல் பேசுகிறார்!” – அமைச்சர் நிர்மல் குமார் ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு: டிடிவி தினகரன் கண்டனம்! “சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!” – ஜவாஹிருல்லா Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு – கடும் எதிர்ப்பையடுத்து அரசாணை வாபஸ்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk