தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தற்போது லிட்டருக்கு 15 ரூபாய்க்கு மேல் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 4.70 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து கொண்டிருப்பது பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்து உள்ளது. ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட பிறகு தமிழ்நாட்டில் உள்ள தனியார் பால் நிறுவனங்கள் மட்டுமின்றி அண்டை மாநில தனியார் பால் நிறுவனங்களும் தங்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். விஸ்வரூபம் எடுக்கும் பாலியல் வன்கொடுமை: தி.மு.க பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்; அறிவாலயம் அதிரடி காரணம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் தனியார் பால் நிறுவனங்கள் தங்களுக்கான பால் கொள்முதலை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடி வருகின்ற சூழலில் ஆவினுக்கான பால் கொள்முதல் விலை உயர்வு அந்நிறுவனங்களுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியதால் வேறு வழியின்றி விவசாய பெரு மக்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க தொடங்கின. அவ்வாறு பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிய காரணத்தால் அந்த நிதியிழப்பை ஈடுசெய்ய தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் (செப்டம்பர்-21) தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களுள் ஒன்றான ஆரோக்யா நிறுவனம் தங்களின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 வரையிலும், தயிர் விற்பனை விலையை கிலோவிற்கு ரூ.2 உயர்த்தியது. இந்த சூழலில் தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனங்களுள் ஆரோக்யாவை தொடர்ந்து அண்டை மாநில தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, சீனாவாசா, வல்லபா, ஜெர்சி உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் செப்டம்பர் 26 முதல் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 வரையிலும், தயிர் விற்பனை விலையை கிலோவிற்கு ரூ.2 உயர்த்த இருக்கின்றன. அதன்படி 500 மி.லி சமன்படுத்தப்பட்ட பால் ரூ.31 இருந்து ரூ.32 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.35-ல் இருந்து ரூ.37 ஆகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் ரூ.40-ல் இருந்து ரூ.42 ஆகவும், 1000 மி.லி சமன்படுத்தப்பட்ட பால் 59 ரூபாயில் இருந்து 61 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 68 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் 78 ரூபாயில் இருந்து 81 ரூபாயாகவும், 500 கிராம் தயிர் 41 ரூபாயில் இருந்து 42 ரூபாயாகவும், அதிக செறிவூட்டப்பட்ட தயிர் 36 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும் விற்பனை விலை உயர்த்தப்பட உள்ளது. இந்த புதிய விலை செப்டம்பர் 26-ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது. தனியார் பால் நிறுவனங்களின் இந்த விற்பனை விலை உயர்வு காரணமாக ஆவினுக்கும், தனியார் பாலுக்குமான விற்பனை விலை வித்தியாசம் 500 மி.லி சமன்படுத்தப்பட்ட பாலுக்கு 7 ரூபாயும், நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கு 15 ரூபாயும், கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலுக்கு 12 ரூபாய் என சராசரியாக குறைந்தபட்சம் 14 ரூபாய் முதல் அதிகபட்சமாக 30 ரூபாய் வரை ஒரு லிட்டருக்கு விற்பனை விலை வித்தியாசம் இருப்பதால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கவனம் ஆவின் மீது திரும்ப கூடும் என்பதால் தற்போதைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு மேலும் கூடுதலாகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் பால் கொள்முதல் விலைக்கேற்ப விற்பனை விலையை மாற்றி அமைக்காத காரணத்தால் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் தற்போது லிட்டருக்கு 15 ரூபாய்க்கு மேல் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 4.70 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து கொண்டிருப்பது ஒரு கட்டத்தில் ஆவின் நிறுவனம் முடங்கிப் போகும் பேராபத்தில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு ஆவின் பால் விற்பனை விலையில் மாற்றத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மேலும் பால்வளத்துறை என்பது வெறும் ஆவினுக்கான துறையாக மட்டும் இல்லாமல், போக்குவரத்து, மருத்துவம், கல்வி, மின்சாரம் போன்ற துறைகளைப் போன்று ஒட்டுமொத்த பால் உற்பத்தி, விநியோகம், விற்பனையை கண்காணிக்க, தனியார் பால் நிறுவனங்கள், அவற்றின் பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்து, பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையில் ஒரு சீரான அணுகுமுறையை கடைபிடிக்க பாலமான துறையாக பால்வளத்துறை செயல்படுவதற்கான உத்தரவை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நலன் சார்ந்து அடிக்கடி விற்பனை விலையை உயர்த்துவதை தனியார் பால் நிறுவனங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தனியார் பால் விற்பனை விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.30 வித்தியாசம்; தினசரி 4.70 கோடி ரூபாய் இழப்பில் ஆவின்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk