சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் 591.5 கிராம் தங்கமும், துபாயில் இருந்து வந்த விமானத்தில் 25.5 கிராம் தங்கமும் என ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனைகளில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரே நாளில் ரூ.1.31 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த இரண்டு விமானங்களில் பயணம் செய்தவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் சோதனை சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். சோதனையின்போது இரு பயணிகளின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அவர்களை தனியாக அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது இருவரும் தங்களது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 591.5 கிராம் தங்கம் பறிமுதல் இரு பயணிகளிடமிருந்தும் மொத்தம் 591.5 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது சுமார் 74 பவுன் எடையுடைய தங்கமாகும். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.90.33 லட்சம் என சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தங்கத்தை கடத்தி வந்ததாக கூறப்படும் இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் தங்கம் எங்கிருந்து பெறப்பட்டது, யாருக்காக கொண்டு வரப்பட்டது, இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துபாயில் இருந்து வந்த பயணியிடமும் தங்கம் இதேபோல், துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணி தனது சட்டையில் தங்கத்தை பட்டன் வடிவில் மறைத்து வைத்து கொண்டு வந்தது சோதனையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து 25.5 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.41 லட்சம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ரூ.1.31 கோடி தங்கம் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் 591.5 கிராம் தங்கமும், துபாயில் இருந்து வந்த விமானத்தில் 25.5 கிராம் தங்கமும் என ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனைகளில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரு சம்பவங்களிலும் சேர்த்து ரூ.1.31 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களை தனியாக அழைத்துச் சென்று கூடுதல் சோதனை நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. செய்தி - க.சண்முகவடிவேல் Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.31 கோடி தங்கம் பறிமுதல்; உள்ளாடை, சட்டை பட்டனில் மறைத்து கடத்தல்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk