கேரளா முதல் காஷ்மீர், அயோத்தி வரை: தேர்தல் ஆணையத்தின் உச்சப் பதவியை அடைந்த ஞானேஷ் குமாரின் பயணம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
கேரளா முதல் காஷ்மீர், அயோத்தி வரை: தேர்தல் ஆணையத்தின் உச்சப் பதவியை அடைந்த ஞானேஷ் குமாரின் பயணம்

அரசியல் புயலைக் கிளப்பியுள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ புலனாய்வுச் செய்தியானது, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் தங்களுக்குத் தெரியாமல் தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்குக் குறைந்தது 14 முறையாவது அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்துள்ளனர் என்பதைக் கண்டறிந்துள்ளது. ஞானேஷ் குமார் கடந்த ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். தேர்தல் ஆணையத்திற்குள் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பிளவு குறித்த 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' புலனாய்வு, தலைமைத் தேர்தல் ஆணையர் (சி.இ.சி.) ஞானேஷ் குமார் மீது நாட்டின் கவனத்தைத் திருப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தலைமையில் உள்ள இவரது பதவிக் காலம் தொடர் சர்ச்சைகளால் சூழப்பட்டுள்ளது. 62 வயதான இவர், தேர்தல் ஆணையத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான சர்ச்சைக்குரிய புதிய சட்டம் (இதில் தேர்வு செய்யும் குழுவில் அரசுக்கே சாதகமான சூழல் உள்ளது) அமலுக்கு வந்த பிறகு நியமிக்கப்பட்ட முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் (சி.இ.சி) ஆவார். ஆங்கிலத்தில் படிக்க: இவரது 19 மாத பதவிக் காலத்தில், பல மாநிலங்களில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சிக்கு சாதகமாகத் தேர்தல் ஆணையத்தை ஞானேஷ் குமார் பயன்படுத்துவதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் (சி.இ.சி) நிராகரித்துள்ளார். அரசியல் புயலைக் கிளப்பியுள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' புலனாய்வில், தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், கடந்த 10 மாதங்களில் தங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவுகளுக்குக் குறைந்தது 14 முறையாவது அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டிற்குள் இருக்கும் வெளிப்படைத்தன்மையற்ற தன்மையை இந்த எக்ஸ்பிரஸ் புலனாய்வு அம்பலப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆணையத்தில் உள்ள ஞானேஷ் குமாரின் 2 சக ஆணையர்களும் தங்கள் கவலைகளை மத்திய அமைச்சரவைச் செயலாளருக்குக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எக்ஸ்பிரஸ் செய்திக்குப் பிறகு எழுந்துள்ள அரசியல் புயல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் (சி.இ.சி) இன்னும் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. ஞானேஷ் குமார்: கேரளா முதல் காஷ்மீர் - அயோத்தி வரை குமார் 1988-ம் ஆண்டு கேரளா பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள இவரது சுயவிவரக் குறிப்பில், கான்பூர் ஐ.ஐ.டி-யில் பெற்ற பி.டெக். பட்டமும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த சுற்றுச்சூழல் பொருளாதாரப் படிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவரது முதல் பணி நியமனம் 1990-ல் கேரளாவின் பத்தனம்திட்டா சப்-கலெக்டராக அமைந்தது. பின்னர் மாநிலத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அவர், 2012-ல் டெல்லியில் உள்ள கேரளா ஹவுஸின் முதன்மை ஆணையராக (ரெசிடென்ட் கமிஷனர்) பொறுப்பேற்றார். மே 2016-ல், அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையின் கீழ், உள்துறை அமைச்சகத்தின் காஷ்மீர் பிரிவின் இணைச் செயலாளராக (ஜாயிண்ட் செக்ரட்டரி) ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்ட பிறகுதான் இவரது அதிகாரத்துவப் பயணம் உண்மையாகவே அடுத்தகட்டத்திற்குப் பாய்ந்தது. அது, ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானியின் தலைமையிலான தீவிரவாதத்தால் பள்ளத்தாக்கில் மீண்டும் வன்முறை வெடித்த காலம். அப்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பி.டி.பி - பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் இருந்தது. 2019-ல் அமித்ஷா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கான 'ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை' வரைவு செய்யும் பணியில் குமார் ஈடுபடுத்தப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வின் மிகப்பழமையான கருத்தியல் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்குப் பிந்தைய காஷ்மீர் சூழ்நிலையை, பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட அவர் கையாண்ட விதம், அமித்ஷாவின் நம்பிக்கையைப் பெறக் காரணமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது. அவரது அடுத்த திட்டம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை மேற்பார்வையிட்ட 'ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை' உருவாக்குவதாகும். 2020-ல், ஞானேஷ் குமாரின் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டது. 1988-ம் ஆண்டைச் சேர்ந்த 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைச் செயலாளர்களாக உயர்த்தும் பட்டியலில் அரசு இவரைச் சேர்க்கவில்லை. ஆனால், பிப்ரவரி 2021-ல் மீண்டும் முன்னிலைக்கு வந்த ஞானேஷ் குமார், நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் அமித்ஷா, தனது கட்டுப்பாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அமைச்சகத்திற்கு இவரைத் தேர்ந்தெடுத்தார். உள்துறை அமைச்சகத்தில் ஞானேஷ் குமாருடன் இணைந்து பணியாற்றிய ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில், "அவர் நுணுக்கமான விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்துவார். விஷயங்களை மற்றவர்களிடம் விட்டுவிடாமல், தனிப்பட்ட முறையில் ஈடுபடுவார்... ஆகஸ்ட் 5, 2019-க்குப் பிந்தைய காலத்தில், கடும் நெருக்கடியிலும் சிறப்பாகப் பணியாற்றும் அவரது திறனை நாங்கள் கண்டோம். இருப்பினும், சக ஊழியர்களிடம் எப்போதும் நட்பாகவும் கனிவாகவும் இருப்பார்; அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை" என்றார். ஞானேஷ் குமாரின் மகள்களும் குடிமைப் பணிகளில் உள்ளனர் - ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி, மற்றொருவர் ஐ.ஆர்.எஸ். அதிகாரி. இருவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் திருமணம் செய்துள்ளனர். ஓய்வு, அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையப் பொறுப்பு ஜனவரி 2024-ல் பணிநிறைவு பெற்ற இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில், ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது நியமனம் மார்ச் 15, 2024-ல் அறிவிக்கப்பட்டது; அதற்கு அடுத்த நாளே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் பரபரப்பு நிறைந்த அந்த ஆண்டில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தல், அத்துடன் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி தேர்தல்களிலும் ஞானேஷ் குமார் ஈடுபட்டிருந்தார். ஆணையத்தின் மூத்த அதிகாரியாக இருந்ததால், ஞானேஷ் குமார் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. வட்டாரங்களின்படி, இந்தப் புதிய விதியை எதிர்பார்த்து, பொறுப்பேற்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பே அதிகாரிகளுடன் ஆலோசனைகளைத் தொடங்கினார். இறுதியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தலைமை தேர்தல் ஆணையர் ஆனார். தலைமை தேர்தல் ஆணையராஜ ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பிறப்பித்த முதல் உத்தரவுகளில் ஒன்று, 'நிர்வாச்சன் சதன்' ஊழியர்கள் அனைவரும் பயோமெட்ரிக் முறையில் தவறாமல் வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்பதாகும். மேலும், கூட்டங்களில் காரசாரமான விவாதங்கள் நடப்பது வழக்கமானது என்று அதிகாரிகள் கூறினர் - இது அவரது முன்னோடியான ராஜீவ் குமாரின் பாணியிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. அதன்பின்னர்தான், தேசிய அளவில் முகப்புச் செய்திகளில் இடம்பெற்ற 'சிறப்பு தீவிர திருத்தம்' (எஸ்.ஐ.ஆர்) நடைமுறைக்கு வந்தது. இது நாடு முழுவதும் உள்ள தேர்தல்களில் பா.ஜ.க-வுக்குச் சாதகமாக வாக்காளர்களைச் சேர்ப்பதாகவும் நீக்குவதாகவும் குற்றச்சாட்டுகளைப் பெற்றது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குத் தேர்தல் ஆணையம் அளித்த பதிலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தேர்தல் ஆணையம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் இந்தக் குற்றச்சாட்டுகளை "வழிகேடானது" என்று கூறி நிராகரித்தது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்குச் சவால் விடுத்த ஞானேஷ் குமார், அவரது "வாக்குத் திருட்டு" குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் அல்லது "நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார். தனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும், வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் குளிர்காலத்தில் அன்பின் அடையாளமாக வழங்கப்படும் காஷ்மீரின் பாரம்பரிய 'காஹ்வா' பானத்தைக் குடிக்காமல் செல்ல அனுமதிக்காத அந்தப் பழைய மனிதரிடமிருந்து, ஞானேஷ் குமார் இன்று வெகுதூரம் வந்துவிட்டார் என்பதைப் பலராலும் நம்ப முடிவதில்லை. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. A seasoned journalist with 10+ years of experience in print, digital, and broadcast media (Indian Express Tamil, Hindu Tamil, Jaya Plus). Currently a Senior Sub-Editor, he blends his M.A. in History with a deep commitment to news authenticity and social impact. As an active poet and short story writer, he brings a unique literary perspective to journalism. Expert in news verification and digital editorial. Highlights: 10+ Yrs Exp M.A. History Poetry & Fiction writer இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை