பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இரண்டு நகரங்களும் செயற்கை நுண்ணறிவு (AI), டீப்டெக், செமிகண்டக்டர்கள், ஸ்பேஸ்டெக் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) போன்ற ஒரே மாதிரியான முக்கிய தொழில்நுட்பத் துறைகளில் வேகமாக வளர்ந்து வருகின்றன. நவம்பரில் பெங்களூரு டெக் சமிட் 2026: சென்னை நிறுவனங்களுக்கு சிறப்பு அழைப்பு! வரவிருக்கும் 29-வது பெங்களூரு டெக் சமிட் (BTS 2026) மாநாட்டை முன்னிட்டு, கர்நாடக அரசு சென்னையில் புதன்கிழமை அன்று சிறப்புத் தொழில் துறை சந்திப்பை நடத்தியது. இதில் சென்னை ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்துகொள்ளவும், முதலீடுகள் மற்றும் கூட்டுறவிற்கான வாய்ப்புகளை ஆராயவும் அழைப்பு விடுக்கப்பட்டது. வரும் நவம்பர் 17 முதல் 19 வரை பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் 'ஏ.ஐ- பியாண்ட்' என்ற கருப்பொருளின் கீழ் இந்த மூன்று நாள் மாநாடு நடைபெறவுள்ளது. இதன் முன்னோட்டமாகவே (Curtain-raiser) சென்னையில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (AI), டீப்டெக், செமிகண்டக்டர்கள், விண்வெளி தொழில்நுட்பம் (Spacetech) மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) போன்ற ஒரே மாதிரியான தொழில்நுட்பத் துறைகளில் பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களும் தற்போது வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது பேசிய கர்நாடக அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல்-தொழில்நுட்பத் துறை செயலர் என். மஞ்சுலா, சென்னைத் தொழில்துறையினருக்கு மாநாட்டின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதே இந்த ரோட்ஷோவின் நோக்கம் என்றார். முதலீடுகளை ஈர்ப்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் போட்டி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "சென்னையிலும் சில சாதகமான அம்சங்கள் உள்ளன, பெங்களூரிலும் உள்ளன. சிலவற்றில் நாங்களும், சிலவற்றில் சென்னையும் சிறந்து விளங்குகிறது. இதனை இரு நகரங்களுக்கு இடையேயான போட்டியாகக் கருதாமல், இரு சுற்றுச்சூழல் அமைப்புகளும் பரஸ்பரம் இணைந்து செயல்படுவதன் மூலம் பயனடையலாம்” என்று தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான பெங்களூரு டெக் சமிட் மாநாட்டில், 'எம்பெடட் வேர்ல்டு இண்டியா’ (embedded world India0 இன் முதல் இந்தியப் பதிப்பு இணைக்கப்படவுள்ளது. நுரென்பெர்க்மெஸ் இந்தியா (NuernbergMesse India) நடத்தும் இந்நிகழ்ச்சி, எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர்கள் மற்றும் எம்பெடெட் அமைப்புகளை மையமாகக் கொண்டிருக்கும். ஏற்கனவே உள்ள ஸ்டார்ட்-அப் மற்றும் ஆராய்ச்சி மையங்களுடன், ஏ.ஐ, டீப்டெக், குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் போன்ற புதிய துறைகளிலும் பெங்களூருவின் தொழில்நுட்ப எல்லையை விரிவுபடுத்தும் முயற்சிகளை கர்நாடக அரசு இந்த நிகழ்வில் எடுத்துரைத்தது. பெங்களூரு டெக் சமிட் 2026 மாநாட்டில் 75-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 1,800-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 1,000 தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்கள் மற்றும் ஏராளமான வர்த்தக பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்டார்ட்-அப்களுக்கான முதலீட்டாளர் பிட்சிங், வழிகாட்டுதல் மற்றும் ஸ்டார்ட்-அப் காட்சிகளை உள்ளடக்கிய 'ஃப்யூட்சர்ஸ் மேக்கர்ஸ்' திட்டமும் இதில் இடம்பெறவுள்ளது. கர்நாடக அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் - உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் எஸ்.டி.பி.ஐ. (STPI) இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Hello! I am Abisudha, a seasoned media professional with over 7 years of experience in digital journalism. Currently serving as a Sub-Editor at The Indian Express (Tamil) since 2021, I specialize in reporting on Business, Politics, and National news. My editorial journey began in 2017 as a Casual Announcer for All India Radio (FM Rainbow 102.6) in Tirunelveli. Before joining my current role, I spent two years as a Copy Editor at Times of India (Samayam Tamil) and have extensive experience in lifestyle reporting. I hold a Bachelor’s degree in Visual Communication from St. Xavier’s College, Tirunelveli and a Master’s in Journalism from Manonmaniam Sundaranar University. Contact: abi.sudha@indianexpress.com இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
நவம்பரில் பெங்களூரு டெக் சமிட் 2026: சென்னை ஸ்டார்ட்-அப்களுக்கு சிறப்பு அழைப்பு
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk